மலேசியா ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என்கிறார் சரவாக் மாநில தலைவர்

மலேசியா ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என்கிறார் சரவாக் மாநில தலைவர் அபாங் ஜொகாரி ஓபிங்.

அவரின் கருத்துப்படி 1963ஆம் ஆண்டு செய்யப்பட்ட அந்த மலேசிய ஒப்பந்தத்தை மேலும் பிரச்சினைக்கு உள்ளாக்கும் வகையில் விவாதத்தைத் விவாதம் செய்யக் கூடாது என்கிறார்.

தேசிய முன்னணி துணைத்த்லைவர் முகமட் ஹசான் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற வகையில் கருத்து கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜொகாரி, மலேசியா ஒப்பந்தத்தில் இருக்கும் சரத்துக்களை பின்பற்றினால் மட்டுமே போதுமானது அதைவிட்டுவிட்டு அந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது முரணானது என்றார்,

அவரின் கருத்துப்படி அந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மத்திய அரசின் பல சரத்துக்கள் இன்னமும் முழுமைப்படுத்த படாத சூழ்நிலையில் தான் உள்ளது என்கிறார்.

“எங்களுக்கு தேவை புது ஒப்பந்தம் அல்ல மாறாக பழைய ஒப்பந்தத்தில் இருக்கும் சரத்துக்களை முழுமைப்படுத்த வேண்டும் என்பதுதான். மலேசிய ஒப்பந்தம் 1963 என்று கூறப்படும் அதில் இருக்கும் சத்துக்களில் ஒன்று சரவாக்கொன்  மேம்பாட்டுக்காக போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகும். 112 D மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அந்த மானியம் வழம்க்கப்பட வேண்டும்.

மேலும் சரவாக் மாநிலத்தின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில் போதுமான ஒதுக்கீடுகளை மாநிலத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். அவருடைய கருத்துப்படி மலேசியாவின் மத்திய அரசின் நிதி நிலவரம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அதன் அடிப்படையில் சரவாக் மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை அவர்கள் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.