பெஜுவாங் இராஜதந்திரியாக செயல்படாது மாறாக அடுத்த தேர்தலில் நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் என்கிறது.
15ஆவது பொதுத் தேர்தலின் பங்கெடுக்கும் நாங்கள் அந்தத் தேர்தலின் வழி நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற கருத்தை அதன் துணைத் தலைவர் மர்சுக்கி யாயா வழி தெரிவித்துள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் சுமார் 115 இடங்களில் வெற்றி பெறப்போவதாக கொடி காட்டியுள்ளது. அடுத்த தேர்தலில் 120 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாவும் அதில் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜோகூர் மாநில தேர்தலின் முடிவுகள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக இல்லை என்பதை உணர்வதாகவும் ஆனால் அது கட்சியின் தற்போதைய சாதனைகளை உணராத நிலை என்று கூறினார்.
இதனடிப்படையில் அடுத்த பொதுத்தேர்தலில் அரசாங்கத்தை அமைப்பதற்காக நாங்கள் 120 தொகுதிகளுக்கு மேலாக போட்டியிட வேண்டும் என்றார்.
14வது பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் முகமது தலைமைத்துவம் மக்கள் நீதிக் கட்சியின் கீழ் போட்டியிட்டனர் அதன் அடிப்படையில்தான் ஏழாவது பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பெர்சத்து வெளியானதை ஒட்டி 2020-இல் மகாதீர் பதவியை இழந்தார்.
அதன்பிறகுதான் பெஜுவாங் என்ற கட்சியை மகாதீர் ஆரம்பித்தார்.
அடுத்த தேர்தலில் கட்சி தன்னிச்சையாக போட்டியிடும் என்று கோடி காட்டுகிறார். கடந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெஜுவாங் 50 தொகுதிகளில் 42 தொகுதிகளில் போட்டியிட்டது அதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.