காவடி குறித்த உணர்ச்சியற்ற கருத்துக்கு தோக் மாட் மன்னிப்பு கேட்க வேண்டும்

காவடி குறித்த உணர்ச்சியற்ற கருத்துக்கு தோக் மாட் மன்னிப்பு  கேட்காவிட்டால் முகமது ஹசன் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என கோபி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய சமூகத்தின் மீது உணர்வற்ற கருத்துக்களை கூறியதற்காக 24 மணி நேரத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களிடமும் அம்னோ  துணைத் தலைவர் முகமட் ஹசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு உறுப்பினரான கோபி.

14வது பொதுத் தேர்தலில் (GE14) அம்னோவின் தோல்வியை விவரிப்பதில் காவடியை போன்ற “சுமை” என்று அம்னோ தலைவர் கூறியதாக, ஏசியா டைம்ஸ் உடனான முகமட்டின் சமீபத்திய பேட்டியைத் தொடர்ந்து இது நடந்தது.

நெகிரியின் முன்னாள் மந்திரி பெசாருமான இவர், தீபாவளியின் போது காவடி எடுக்கும் போது என்றுத் தவறாகவும் கூறியிருந்தார். காவடி  தைப்பூசத்தின் போது எடுக்ககப்படுவதாகும்.

பெர்சதுவின் அசோசியேட் தகவல் பிரிவின் தலைவரான எஸ் கோபி கிருஷ்ணன், தோக்  மாட் என்றும் அழைக்கப்படும் முகமட், இந்துக்களை அவமதித்ததாகவும், மதத்தைப் பற்றிய புரிதல் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறிய கருத்துக்களுக்காக அவரை விமர்சித்தார்.

காவடி ஏந்திச் செல்வது, ஒரு நபர் செய்த வாக்கை நிறைவேற்றுவதற்காகவும், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவின் போது முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாகவும் இருப்பதாக கோபி கூறினார்.

“இந்து சடங்குகளை ஒரு சுமை என்று குறிப்பிடுவதன் மூலம் அவர் இந்து சமூகத்தின் உணர்வுகளை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.”

“தோக் மாட், தயவுசெய்து உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்,” என்று அவர் கூறினார், அவர் அவ்வாறு செய்யத் தவறினால், அவர் மீது காவல்துறையில் புகார் செய்யபப்டும்” என்றார்.