GE15க்கான புதிய சின்னம் அறிமுகம் – பெரிக்கத்தான் நேஷனல்

15வது பொதுத் தேர்தலில் பயன்படுத்த புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தவுள்ளது, பெரிக்கத்தான் நேஷனல்.  சுப்ரீம் கவுன்சில் கூட்டத்தில் அதன் சின்னத்தை  மாற்றுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்யப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து இது நடந்ததாக பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் முஹையிடின் யாசின் கூறினார்.

“தற்போதைய சின்னம் ஏற்கனவே நன்றாக உள்ளது, ஆனால் நாங்கள் அதை மேம்படுத்துவோம்”.

“எனவே, பொருத்தமான சின்னம் அறிமுகப்படுத்தப்பட்ட பின், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்படும்,” என்று அவர் இன்று கம்போங் மஞ்சோயில் பேராக் பிஎன் ஐடிலதா கெந்தூரி மக்கள் விருந்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

பெரிக்கத்தான் நேஷனலின் தற்போதைய சின்னம்

முன்னதாக, வரும் தேர்தலில் பாஸ் கட்சி தனது வேட்பாளர்களுக்கு பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தைப் பயன்படுத்தாது, ஆனால் அதன் சொந்த “முழு நிலவு” சின்னத்தைப் பயன்படுத்தும் என்று பாஸ் குறித்து கருத்து தெரிவிக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டது.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், வரும் GE15ல் கட்சி தனது வேட்பாளர்களுக்கு பொருத்தமான புதிய சின்னத்தை பயன்படுத்தும் என்று கூறினார்.

பெரிக்கத்தான் நேஷனலுக்கு மிகவும் பொருத்தமான சின்னத்தை தேட விரும்புவதாக பாஸ் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடினால் உருவாக்கப்பட்டு வருவதாகவும் முஹையிடின் தெரிவித்தார்.

FMT