டாக்டர் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது பெஜுவாங்கின் உரிமை

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், டாக்டர் மகாதீர் முகமட்டை பிரதமராக முன்னிறுத்துவது பெஜுவாங்கின் உரிமை,  என்று பெஜுவாங் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே மற்றவர்கள் கட்சியின் தேர்வு குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கைருடின் அபு ஹாசன் கூறினார்.

“நாம் ஏன் மகாதீரை பரிந்துரைக்கக் கூடாது?” முன்னாள் பிரதமர் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வருவதற்கு தகுதியானவர் என்பதை சுட்டிக்காட்டி கட்சியின் கூட்டாட்சிப் பகுதிகளின் தலைவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

“நாட்டில் உள்ள மற்ற தலைவர்களுடன் ஒப்பிடுகையில் அவர் அதிக திறன்களையும் அறிவையும் பெற்றுள்ளார்.

பிகேஆர் தலைவர் மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்களான “அன்வார் இப்ராஹிம், நஜிப் ரசாக், முஹைடின் யாசின் மற்றும் பிறரின் திறன்களை மகாதீருடன் ஒப்பிட முடியாது”, என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையை நிலைநிறுத்துவதற்கான தனது போராட்டத்தில் மகாதீர் ஒருபோதும் சளைத்ததில்லை என்றும் கைருடின் குறிப்பிட்டார்.

97 வயதான மகாதீர் குறைந்தது ஒரு வருடமாவது பணியாற்றியிருந்தால், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு “மாஸ்டர் பிளான்” வரைய இயலும்.

“அவரது பரந்த அனுபவம் புதிய மலேசியாவை உருவாக்க உதவும். அவரைவிட சிறந்த மனிதர் யாரும் இல்லை.

கடந்த மாதம், மகாதீர் தனது லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை என்றால், GE15 இல் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இருப்பினும், மார்ச் மாதம், மகாதீர் தனது உடல்நலம் மற்றும் வயதைக் காரணம் காட்டி, GE15 இல் தனது லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்கப் போவதில்லை என்று முடிவு செய்ததாகக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FMT