பெற்றோரின் திருமணத்தை பதிவு செய்யாதவர்களின் குழந்தைகளை “தண்டிக்கும்” வகையில் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனின் கருத்துக்கள் உள்ளன என்று சாடுகிறது உரிமைகள் போராட்ட குழுவான, லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (எல்எஃப்எல்).
குழுவின் இயக்குனர் சாட் மாலிக் கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் இல்லையேல் அந்தக் குழந்தைகள் நாடற்றவர்களாக ஆக்கப்படிவர் என்ற ஹம்சாவின் எச்சரிக்கை, அரசாங்கம் உரிமையுள்ளவர்கள் குடியுரிமையைப் பெறுவதை உறுதிசெய்யும் அரசாங்க பொறுப்பை, பொதுமக்களின் தலையில் சுமத்துவதாக அமையும் என்றார்.
“முக்கியமாக, திருமணங்களை பதிவு செய்யாதது போன்றவை அதிகாரத்துவ மற்றும் அரசாங்க கெடுபிடியால் பிரச்சனைக்காக இருக்கும் போது, உள்துறை அமைச்சர் அப்பாவி குழந்தைகளை தண்டிக்கிறார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
“திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் மலேசியராக இருக்கும் போது பிறந்த குழந்தைக்கு குடியுரிமை மறுப்பது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது.” என்றார் மாலிக்.
“இதைப் பற்றி தெளிவாகச்சொன்னால், குடியுரிமைக்கு தகுதியுடைய ஒவ்வொரு குழந்தைக்கும், குடியுரிமை கொடுக்காமல் இருப்பது உள்துறை அமைச்சகத்தின் தவறு. பெற்றோரின் மீது அல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஹம்சா நேற்று சபாவின் கெமாபோங்கில் தனது கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அவர்களின் திருமணத்தைப் பதிவுசெய்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை.
குறிப்பாக சபாவில் உள்ள மக்களிடையே அடையாள ஆவணங்களுக்கு விண்ணப்பிப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்கான முயற்சிகளை உள்துறை அமைச்சகம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்றும் ஹம்சா கூறினார்.
இயக்குனர் ஜைத் மாலிக்
எவ்வாறாயினும், சரியான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழிகாட்டுதலுடன் திருமணப் பதிவு தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குமாறு மாலிக் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு இடையூறாக இல்லாமல், எளிதில் சரிசெய்யப்படும் நிர்வாக பிரச்சனையாக கருதப்பட வேண்டும் என்றார்.
“தேசியப் பதிவுத் துறையின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பார்க்குமாறு உள்துறை அமைச்சரை நாங்கள் வலியுறுத்துகிறோம்.”
மேலும், திருமணப் பதிவுச் சிக்கல்கள் ஒரு குழந்தையின் குடியுரிமையைப் பறிப்பதற்கு ஒருபோதும் காரணமாக இருக்கக்கூடாது, ஏனெனில் அவர்கள் மருத்துவம், கல்வி மற்றும் பின்னர் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றார்.
“நாட்டற்றவர்கள் அனுபவிக்கும் மனித துன்பங்களைத் தவிர, பொருளாதாரம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கக்கூடிய ஒரு பெரிய குடிமக்களையும் நாடு இழக்கிறது.”
“மாறாக, அவர்கள் சமூகத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஹம்சா மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அணுகுமுறை இப்போது பிரச்சனையை நீடித்து மோசமாக்குகிறது,” என்றார் மாலிக் .