நாடாளுமன்றம் | மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக இலக்கு மானியங்களை செயல்படுத்துவது ஒரு சிக்கலான விஷயம் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
எடுத்துக்காட்டாக, பாலித்தீன் பைகளில் மானிய விலையில் பாமாயிலைப் பயன்படுத்துவது வணிக நோக்கங்களுக்காக அனுமதிக்கப்படாது என்றாலும், குறைந்த வருமானம் ஈட்டுவோர் பிழைப்புக்காக அவ்வாறு செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.
கோரிங் பிசாங் (வாழைப்பழ பஜ்ஜி) விற்கும் (பெண்), அவர்கள் கோரிங் பிசாங் விற்க (மானியத்துடன்) சமையல் எண்ணெயைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்றால் அது தவறு ஆகும்.
ஏனென்றால், இந்த சமையல் எண்ணெய் பாக்கெட் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அமலாக்க அதிகாரிகள் இவர்கள் மீது வழக்குத் தொடர விரும்புகிறீர்களா அல்லது சமையல் எண்ணெயை பறிமுதல் செய்ய விரும்புகிறீர்களா?
“உயிர் பிழைப்பு நடத்தும் ஏழைகளுக்கு எதிராக நாங்கள் கொடூரமாக நடந்து கொண்டதாக நாங்கள் குற்றம் சாட்டப்படுவோம். இது எளிதானது அல்ல,” என்று இஸ்மாயில் சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
மானிய விலையில் சமையல் எண்ணெயை ஒழுங்குபடுத்தும் எவருக்கும் நடவடிக்கை எடுக்க மனம் வராது என்றார் இஸ்மாயில்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து பதில் கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அவர் பதிலளித்தார்.
அதிக லாபம் ஈட்டும் பாமாயில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் 10 முதல் 15% குறைந்த விலையில் விற்கும்படி கட்டாயப்படுத்த வேண்டும் என்று அன்வார் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
மலிவான எண்ணெய் சரியான கைகளுக்கு செல்வதை உறுதி செய்வதில் பல சவால்கள் உள்ளன என்று இஸ்மாயில் சப்ரி பதிலளித்தார்.
உதாரணமாக, எல்லையில் மானிய விலையில் எண்ணெய் கடத்தப்படுவது ஒரு பெரிய பிரச்சனை என்றும், இந்த நடவடிக்கையை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பெட்ரோல் விலை, பல பணிக்குழுக்கள்
பெட்ரோல் மானியங்கள் குறித்து, ஹராப்பான் உட்பட பல நிர்வாகங்களால் இது ஆய்வு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஒரு உறுதியான தீர்வு இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பம் இருந்தால், அது B60க்கான விலைகளைக் குறைக்க முடியும் என்று அன்வார் கூறினார்.
பணிக்குழுக்கள் மீதான அரசாங்கத்தின் ஆர்வம் குறித்து இஸ்மாயில் சப்ரி கூறுகையில், 2014 முதல் வாழ்க்கைச் செலவு குறித்த பணிக்குழு நடைமுறையில் உள்ளது என்றார்.
எவ்வாறெனினும், தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன், பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாத் என அழைக்கப்படும் இந்த பணிக்குழு(Jihad Against Inflation Special Task Force) வாரத்திற்கு இரண்டு தடவைகள் கூடி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் முனைப்புடன் செயற்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தது.