பாமாயில் துறையில் ரிம 10.46 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பதிற்கு அரசாங்கம் அஞ்சுகிறது

வாழ்வாதாரத்தை தேடும் அகதிகளை வேலைக்கு அமர்த்துவதற்கான தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 54,190 தோட்டத் தொழிலாளர்களின் பற்றாக்குறையை அரசாங்கம் பதிவு செய்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் ஏறத்தாழ 75% தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர், பற்றாக்குறையில் கிட்டத்தட்ட பாதி அறுவடை செய்பவர்கள் மற்றும் புதிய பழ கொத்து (Fresh Fruit Bunch) பறிப்பவர்கள் உள்ளனர்.

28,940 அறுவடை மற்றும் புதிய பழ கொத்து எடுப்பவர்களின் பற்றாக்குறையின் அடிப்படையில், மதிப்பிடப்பட்ட சராசரி உற்பத்தித்திறன் இரண்டு டன் FFB (ஒரு நபருக்கு), மொத்த மதிப்பிடப்பட்ட அறுவடை செய்யப்படாத FFB தினசரி 57,880 டன்கள்.

“ஒரு தொழிலாளிக்கு 26 வேலை நாட்களைக் கணக்கில் கொண்டால், அறுவடை செய்யப்படாத FFB ஒரு மாதத்திற்கு 1.5 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று தோட்ட அமைச்சர் ஜுரைடா கமருடின், டாக்டர் அஸ்மான் இப்ராகிமுக்கு (ஹராப்பான்-குவாலா கெடா) எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்

இந்த கணக்கீடுகளின் அடிப்படையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால் அறுவடை செய்யப்படாத FFB க்கு ஏற்பட்ட இழப்பு 7.52 மில்லியன் டன்கள் ஆகும், இதன் மதிப்பு RM10.46 பில்லியன் ஆகும்.

“இது இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான சராசரி FFB  விலையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இது டன் மெட்ரிக் ஒன்றுக்கு ரிம1,390 ஆகும், “என்று அவர் கூறினார்.

இது தொடர்பான விவகாரம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் அப்துல் லத்தீஃப் அகமது கூறுகையில், அகதிகள் மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கும் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அனுமதி வழங்குவதில் அரசாங்கம் எச்சரிக்கையுடன் அணுகுமுறையை எடுத்து வருகிறது.

“அகதிகளுக்கு வழங்கப்படும் ஒப்புதல்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு ஒரு போட்டியை முன்வைக்காது என்பதையும், UNHCR இல் இருந்து அகதி அந்தஸ்தை நாடும் அதிகமான ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் இங்கு வேலை செய்ய நுழைவதற்கான ஒரு இழுவை காரணியாக மாறுவதையும் அரசாங்கம் உறுதி செய்வது முக்கியம்,” என்று லாடிஃப்( Latiff), வோங் சென்னுக்கு(Wong Chen) (Harapan-Subang) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.

பரிசீலனையில் உள்ள பல்வேறு சட்ட விஷயங்களில் வேலை அனுமதி வழங்குதல், முதலாளிகளால் கட்டணம் செலுத்துதல், வேலை ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட துறைகள் மற்றும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்ள பிற விஷயங்கள் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

“இந்த விவகாரம் குறித்த கொள்கை முடிவு, அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அரசாங்கம் விரிவான ஆய்வு நடத்திய பின்னரே தெரிவிக்கப்படும்”.

“அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை அகதிகள் சுயவாழ்வுக்காக மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது,” என்று லத்தீஃப் கூறினார்.