சுலு கோரிக்கை தீர்க்கப்படும் வரை டாமி தாமஸை மலேசியாவை விட்டு வெளியேற விடாதீர்கள் – நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சுலு சுல்தானகத்தின் வாரிசுகளின் அரசாங்கத்திற்கு எதிரான உரிமைகோரல்களுக்கு தீர்வு காணும் வரை, முன்னாள் அரசு முதன்மை தலைவர் டாமி தாமஸ் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு சுலு சுல்தானின் வாரிசுகள் சார்பாக வழக்கறிஞர்களுக்கு டாமி அனுப்பிய கடிதம் மலேசியாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அபாயத்தில் உள்ளது என்று நஜிப் கூறினார்.

லஹாட் டத்து ஊடுருவலுக்குப் பிறகு 2013 முதல் மலேசியா உரிமை கோருபவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று டாமி வருத்தம் தெரிவித்த அந்த கடிதத்தை குறிப்பிட்ட அவர், கடிதத்தின்படி டாமி பல பில்லியன் டாலர் கோரிக்கையை 48,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையுடன் தீர்க்க முன்வந்தார்.

“பக்காத்தான் ஹராப்பான் கால அமைச்சரவை உறுப்பினர்கள் சுலு சுல்தானின் வாரிசுகளின் கோரிக்கைகள் மற்றும் டாமியின் கடிதம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதால், உண்மையை வெளிக்கொண்டு வரும் வரை டாமி நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நியாயமானது. ” என்று தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அரசாங்கம் முடிவு செய்தால் தாம் எதிர்க்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் செபாங்கர் எம்பி அசிஸ் ஜம்மான் மற்றும் கோட்டா பெலூட் எம்பி இஸ்னாரைசா முனிரா ஆகியோர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் நஜிப் இவ்வாறாக கருத்து தெரிவித்தார்.

டாமியின் கடிதம் இருப்பதைப் பற்றியும் அது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது பற்றியும் தங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்று வாரிசன் இரட்டையர்கள் கூறினர்.

சமீபத்தில், சுலு சுல்தானின் வாரிசுகள் சார்பாக பெட்ரோனாஸின் இரண்டு லக்சம்பர்க்கில் பதிவுசெய்யப்பட்ட துணை நிறுவனங்களை ஜாமீன்கள் கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து, சுலு சுல்தானகத்தின் வாரிசுகளுக்கு 14.92 பில்லியன் அமெரிக்க டாலர்களை அரசாங்கம் வழங்க உத்தரவிட்ட பிரெஞ்சு நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிராகத் தடை உத்தரவு பெற்றதாக அரசாங்கம் கூறியது.

 

-FMT