பிஎன் ஒன்றிணைந்தால் டிஏபியை பதவி நீக்கம் செய்ய முடியும்

பினாங்கில் டிஏபியை பதவி நீக்கம் செய்ய விரும்பினால், கூட்டணிகள் அவரவர் கட்சிகளை ஒழுங்கமைக்க வேண்டும், என்று பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் முகமட் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா, ஜொகூர் மற்றும் சரவாக் மாநிலத் தேர்தல்களில் அதன் கோட்டைகளில் டிஏபியின் தோல்விகள் கட்சி பலவீனமாக இருப்பதைக் கட்டியுள்ளளத்தை தொடர்ந்து, மாநிலத்தில் டிஏபியை தோற்கடிப்பது பிஎன்னால் முடியாதது அல்ல.

“அவர்களின் கோட்டையான துரியன் துங்கலை மலகாவில் வென்றோம், எனவே டிஏபி மூழ்காதது என்று நாம் நினைக்க வேண்டாம்.” என்று 1,300 க்கும் மேற்பட்ட பிஎன் உறுப்பினர்களை பினாங்கு பிஎன் தேர்தல் இயக்கத்தை அறிமுகப்படுத்திய போது ஹாசன் கூறினார்.

“2013 முதல் DAP வசம் இருந்த ஜொகூர் மாநில சட்டமன்ற இடங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர்,ஜொகூரில் MCA  நிறைய வெற்றிபெறும் என்றும், போட்டியிட்ட நான்கில் மூன்றில் MIC வெற்றிபெறும் என்றும், நாங்கள் யோங் பெங்கை வெல்ல முடியும் என்று யார் எதிர்பார்த்தார்கள், ”? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

2008 முதல் மாநில அரசாங்கத்தை அதன் பங்காளிகளான பிகேஆர் மற்றும் அமானாவுடன் வழிநடத்தி வரும் டிஏபியை பதவி நீக்கம் செய்வதற்கான வெற்றிகரமான உத்திகளைக் கொண்டு வரவும், வெற்றிபெறும் மனநிலையை வளர்க்கவும் பிஎன் உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார்.

2008 இல் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பிஎன் இழந்தது. 2018 பொதுத் தேர்தலில், பிஎன் 40 இடங்களில் சுங்கை துவா மற்றும் பெர்மாடாங் பெரங்கன் ஆகிய இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.

GE15க்கான சரியான நேரத்தை இஸ்மாயிலுக்கு பிஎன்னால் கூறமுடியும்.

பாரிசான் நேஷனல், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான நேரத்தில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு “சரியான பரிந்துரைகளை” கொடுக்க முடியும் என்று  அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“பிரதமர் சரியான நேரத்தை பரிசீலித்து காத்திருக்கிறார், எனவே நாங்கள் சரியான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.

“நான் எனது சகாக்களுடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன், பணி வருகைகளின் முடிவுகள் நிர்வாகக் குழு மற்றும் கட்சி அரசியல் பணியக மட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் அதை முடித்து விடுவோம்”.

பினாங்கில் பிஎன் தேர்தல் மையங்கள் 50% தயார்நிலையை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

-FMT