ஜொகூர் அரச குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு தோட்ட நிறுவனம், தேவையான ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பே என்டாவுக்கு(Endau) அருகிலுள்ள ஒரு காட்டை அழித்திருக்கலாம்.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட்(South China Morning Post) இன் அறிக்கையில் இந்த ற்றம் சாட்டப்பட்டது, இது செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாக மேற்கோளிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கையைத் தயாரிக்கும் ஆலோசகர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பே ஒரு குறிப்பிட்ட லாட் நிலம் 4118 அழிக்கப்பட்டதாக படங்கள் காட்டுகின்றன.
உள்ளூர்வாசிகள் SCMPயிடம் கூறுகையில், காட்டில் ஒரு காலத்தில் யானைகள், மான்கள், கிப்பன்கள் மற்றும் ஹார்ன்பில்ஸ் ஆகியவை இருந்தன.
வனவிலங்குகள் மற்றும் நிலத்தடி நீரை ஆய்வு செய்ய ஆலோசகர்கள் வந்தபோதும் காடுகளை அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன என்று அறிக்கை மேலும் கூறியது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் EIA அறிக்கை இறுதியாக பூர்த்தி செய்யப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டது. அதற்குள், SCMPயின் கூற்றுப்படி, 3,775 ஹெக்டேர் நிலம் ஏற்கனவே முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பாசனக் கால்வாய்கள் தோண்டப்பட்டன.
ராயல் இணைப்புகள்
SCMP அறிக்கையின்படி, AA Sawit என்ற நிறுவனம் இதற்கு நியமிக்கப்பட்டது, அது மேற்படி நிலத்தில் ஒரு எண்ணெய் பனை தோட்டத்தை ஸ்தாபிக்க உத்தேசித்துள்ளது.
இந்த நிறுவனம் ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் மற்றும் அவரது மகன் துங்கு இஸ்மாயில் இட்ரிஸ் ஆகியோருக்கு சொந்தமானது.
இந்த திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறு நிலங்களில் நான்கை சுல்தான் இப்ராஹிம் ஏப்ரல் 2018 இல் காடுகளாக இருந்த PTD 4085 மற்றும் PTD 4118 உட்பட – தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாக அறிக்கை கூறியது.
எவ்வாறாயினும், AA Sawit அல்லது வேறு யாராவது காடுகளை அகற்றினார்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை என்று அறிக்கை கூறியது.
மனித-வனவிலங்கு முரன்
சுற்றுப்புறச் சூழல் பிரச்சனைகள் ஏற்கனவே மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
இடம்பெயர்ந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதாகவும், கடந்த ஆண்டு கம்போங் லபோங்கில் இருந்து ஒரு கிராமவாசி இறந்ததாகவும் உள்ளூர் மக்கள் SCMP யிடம் தெரிவித்தனர்.
தற்போதுள்ள தோட்டங்கள் ஆறுகளை பயன்படுத்த முடியாததாகவும், சில நேரங்களில் “கருப்பு காபி” போன்ற நிறத்தால் கறைபடிந்ததாகவும் புகார்கள் உள்ளன.
SCMPயால் நேர்காணல் செய்யப்பட்ட சில செயற்பாட்டாளர்கள், அதிகாரிகள், EIA அறிக்கையை நிராகரித்து, அறிக்கை முடிவதற்கு முன்னர் காடுகள் நிறைந்த நிலத்தில் நடக்கும் நடவடிக்கைகள் காரணமாக தவறு செய்தவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று கூறினர்.
சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974ன் கீழ், EIA விதிமுறைகளை மீறுபவர்களுக்கு RM100,000 வரை அபராதம் விதிக்கப்படும்.