ஜுரைடா: பங்களாதேஷ், இந்தோனேசியாவில் இருந்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டாம்

பெருந்தோட்ட கைத்தொழில்கள்  அமைச்சர் ஜுரைடா கமருதீன் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தொழில்துறையினர் இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் தொழிலாளர்களை நம்புவதற்குப் பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துமாறு வலியுறுத்தினார்.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் எதிர்காலத்தில் பெருந்தோட்டத் துறை ஆராய வேண்டிய தொழிலாளர் விருப்பங்களாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

எவ்வாறெனினும், நாம் அவர்களுக்கு வசதியளித்து, மலேசியாவின் பெருந்தோட்டத் துறைகளில் கிடைக்கக்கூடிய வேலைகளின் வகை குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

“நேர்மறையான ஆர்வம் இருந்தால், ஆரம்ப கட்டத்தில் 50 முதல் 100 வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தத் தொடங்கலாம், அவர்கள் இங்கே வசதியாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க முடியும், “என்று அவர் கூறினார்.

மலேசிய சர்வதேச வேளாண் கண்காட்சி மற்றும் உச்சிமாநாடு (MIACES) 2022 இன் பிரதிநிதிகளுடனான அமர்வின் போது ஜுரைடா (மேலே) நேற்று உரையாற்றினார்

தொழிலார்கள் பதில் நேர்மறையாக இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும்,  அவர் குறிப்பிட்டார்

MIACES 2022 இல், மலேசியாவின் பாமாயில் தொழிற்துறையில் ஒரு சிறந்த முன்னோக்கை வழங்குவதற்கும் பெருந்தோட்டத் துறையில் பயன்படுத்தப்படும் கட்டாய உழைப்பு பற்றிய குற்றச்சாட்டுக்களை அகற்றுவதற்கும் பொருத்தமான தளமாக இந்த நிகழ்வை அவர் பாராட்டினார்.

“உலகெங்கிலும் உள்ள தொழிலார்கள் ஒன்றிணைந்து மலேசியாவின் பாமாயில் தொழில்துறைக்கு ஆதரவளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், அத்துடன் இந்த கண்காட்சியின் மூலம் எங்கள் தோட்டத் துறையைப் பற்றி சிறந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க முடியும்,” என்றும் அவர் கூறினார்.