மலேசியாவுக்கு எதிரான தொழிலாளர் முடக்கத்தை நீக்கியது இந்தோனேஷியா

இந்தோனேசியா, மலேசியாவில் வேலை தேடும் அதன் தொழிலாளர்கள் மீதான தற்காலிக தடையை நீக்கியுள்ளது, ஆகஸ்ட் 1 முதல் ஆட்சேர்ப்பு மீண்டும் தொடங்கலாம் என்று அதன் மனிதவள அமைச்சர் ஐடா ஃபௌஸியா(Ida Fauziyah) கூறினார்.

மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணனுடனான ஒரு கூட்டறிக்கையில், வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பாதுகாப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை திறம்பட செயல்படுத்தப்படும் என்ற இரு அமைச்சகங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தற்காலிக முடக்கம் நீக்கப்பட்டதாக அவர் கூறினார்.

100 நாட்களுக்கு முன்பு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து, ஜூலை 13 அன்று மலேசியாவுக்குள் நுழையும் தொழிலாளர்களுக்கு இந்தோனேசியா தற்காலிக முடக்கத்தை விதித்தது.