புகைபிடிக்கும் ‘அடிப்படை உரிமையை’ விட பொது சுகாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், குறிப்பாக இளைஞர்களுக்கு என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அதைத் தொடர்ந்து, இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரை புகையிலை புகைத்தல் மற்றும் வாப்பிங் செய்வதிலிருந்து பாதுகாப்பதில் சுகாதார அமைச்சின்(MOH) நடவடிக்கைகளுக்கு உதவவும் ஆதரிக்கவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
புகையிலை பொருட்கள், புகைபிடிக்கும் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் புகையிலை தலைமுறை எண்ட்கேம் ஆகியவை 2007 மற்றும் அதற்குப் பின் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு சிகரெட் மற்றும் வாப்பிங் உள்ளிட்ட எந்தவொரு புகைப்பிடிப்பிலிருந்தும் விடுபட்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்று நூர் ஹிஷாம் நேற்று தனது முகநூல் தளத்தில் கூறினார்.
புகையிலை பொருட்கள், புகைபிடிக்கும் கட்டுப்பாட்டு மசோதா 2022, 2007 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் புகைபிடித்தல், புகையிலை பொருட்கள் அல்லது புகைபிடிக்கும் சாதனங்களை வாங்குவது அல்லது வைத்திருப்பது ஆகியவற்றைத் தடை செய்ய வகை செய்கிறது, இது ஜூலை 27, புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் அதன் முதல் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மசோதாவின்படி, புகையிலை பொருட்கள் அல்லது புகையிலை மாற்றுப் பொருட்களை புகைப்பவர்கள், புகைபிடிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் அல்லது வைத்திருப்பவர்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிம5,000 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம்.
மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது போன்ற முந்தைய சட்ட அமலாக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளையும் நூர் ஹிஷாம் மேற்கோள் காட்டினார்.
1975, 1979 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், அந்த நேரத்தில் எம்.பி.க்கள் மக்களின் பிரதிநிதிகளாக தங்கள் அதிகாரத்தை நன்கு பயன்படுத்தி, பல உயிர்களைக் காப்பாற்ற பங்களித்தனர்
“தலைக்கவசம் அல்லது சீட் பெல்ட் அணியாமல் இருக்க ‘மனித உரிமைகள்’ குறித்து எந்தக் கட்சிகளும், செல்வாக்கு செலுத்துபவர்களும் அப்போது கேள்வி எழுப்பவில்லை,” என்று அவர் கூறினார்.