கடந்த வார பேரணியில்  மேலும் நான்கு #Turun நபர்களை போலீசார் அழைப்பார்கள்

கடந்த சனிக்கிழமை #Turun விலை உயர்வு எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட மேலும் நான்கு நபர்கள் விசாரணைக்காக டாங் வாங்கி(Dang Wangi) மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்கள்.

சோகோ ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ் முன் நடந்த பேரணி குறித்து போலீசார் ஏற்கனவே விசாரணையை முடித்துவிட்டதாக முந்தைய அறிக்கை இருந்தபோதிலும் இது நிகழ உள்ளது.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் டெல்ஹான் யஹயா(Noor Dellhan Yahaya), துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட விசாரணை அறிக்கை மேலும் நான்கு நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களுடன் திருப்பி அனுப்பப்பட்டது என்று கூறினார்

“சில அரசியல்வாதிகள் உட்பட நான்கு நபர்களும் விரைவில் நேர்காணல் செய்யப்படுவார்கள், இதனால் விசாரணை ஆவணம் துணை அரசு வழக்கறிஞருக்கு மீண்டும் பரிந்துரைக்கப்படும்,” என்று அவர் சினார் ஹரியானால் மேற்கோள் காட்டினார்.

டதாரன் மெர்டேக்காவில் இன்று நடைபெற்ற 215 ஆவது காவல் நினைவு தினத்துடன் இணைந்து  அணிவகுப்பு நிகழ்வில் நூர் டெல்ஹான் இதனைத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக நம்பப்படும் 27 நபர்களிடமிருந்து அறிக்கைகள் பெறப்பட்டதாக அவர் முன்பு கூறினார்.

மாணவர் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பெர்சே மற்றும் சுவாராம் உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளது.

DAP’s Ketari assemblyperson Young Syefura Othman, PKR Youth chief Adam Adli Abdul Halim, Suaram executive director Sevan Doraisamy, Kapar MP Abdullah Sani Abdul Hamid, and Bersih’s Edlyn Beverly Joeman ஆகியோர் குறிப்பிடத்தக்க நபர்களில் அடங்குவர்.

Adam and Sani, PKR Youth members – Mohd Afiq Ayob, Ng Yih Miin @ Bryan Ng, and Nur Farah Ariana Nurazam ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

10 நிமிடங்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டது

இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டின் அமைதி சட்டம் (Peaceful Assembly) பிரிவு 9 (5) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள்  சோகோ வணிக வளாகத்திற்கு வெளியே கூடி, பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க புத்ராஜெயா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

அமைச்சர்களின் ஊதியக் குறைப்பு, அரசாங்க மானியங்கள் தொடர வேண்டும், மக்களுக்கு கண்ணியமான உதவிகளை வழங்குதல், பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் ஆகிய ஐந்தும் அவர்களின் கோரிக்கைகளாகும்.