போலீஸ் சோதனை, கைதுகளை கானொளியில் பதிவு செய்வது குற்றம், என்பது ஹம்சாவின் அறியாமை

பொது இடங்களில் ரெய்டு அல்லது கைது செய்யும் போது காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை வீடியோக்கள் அல்லது நேரடி ஒளிபரப்புகளை பதிவு செய்வது குற்றம் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின் அறிக்கையை LFL  என்ற ‘சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள்’ என்ற உரிமை குழு நிராகரித்தது.

நாடாளுமன்றத்தில், கெப்போங் எம்பியின் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த ஹம்சா, காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை வீடியோ அல்லது நேரடி ஒளிபரப்பு அல்லது பதிவு செய்வது குற்றம் என்று பதில் அளித்திருந்தார்.

இது சார்பாக  LFL இயக்குனர் சைட் மாலிக் கருத்துரைக்கையில் மலேசியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ, காவல்துறை அதிகாரிகளை கேமரா அல்லது வீடியோ அல்லது லைவ்ஸ்ட்ரீம் மூலம் பதிவுசெய்வதைக் குற்றமாக்கும் சட்ட விதிகள் ஏதும் இல்லை என்று கூறினார்.

“அவர் இப்படி சொல்லுவதற்கு காரணம் அவரின் அறியாமையாக இருக்கலாம் அல்லது அவர்   அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காவல்துறை உறுப்பினர்களின் சட்ட விரோதமான செயல்களை காப்பதாற்காகவும் இருக்கலாம்.

“வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய  சகாப்தத்தில் உள்துறை அமைச்சரால் இதுபோன்ற ஒரு மோசமான அறிக்கையை வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது” என்று ஜைட் மேலும் கூறினார்.

அதோடு,  கைது அல்லது சோதனையை படம்பிடிப்பது, அரசாங்க  அதிகாரிகள்  தங்கள் கடமைகளைச் செய்யவிடாமல் தடுப்பதற்கான தண்டனைச் சட்டத்தின் 186-வது பிரிவின் கீழும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்காக தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் 233-வது பிரிவின் கீழும் ஒரு குற்றத்திற்கு சமம் என்ற ஹம்சாவின் கூற்றை சைட் மறுத்தார்.

LFL இயக்குனர் சைட் மாலெக்

“சுருக்கமாக, ஹம்சா தனது தவறான கூற்றுக்கு ஆதரவாக இந்த இரண்டு சட்டங்களை நம்பியிருப்பது மடமையாகும்” என்றார்.

“உள்துறை அமைச்சரின் நோக்கத்தை ஏற்றவாறு குற்றவியல் சட்டத்தை நீட்டிக்க முடியாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவல்துறையின் தவறான நடத்தை மற்றும் வன்முறை ஆகியவை சமீப ஆண்டுகளில், உடல் கேமராக்கள் மற்றும் பொதுப் பதிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் உலகளாவிய விவாதத்தின் தலைப்பாக மாறியுள்ளன என்று சைட்  சுட்டிக்காட்டினார்.

“சட்டம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ப சோதனைகள் அல்லது கைதுகள் நடத்தப்பட்டால், எந்த காவல்துறை அதிகாரியும் காணொளி பதிவுக்கு பயப்பட தேவையில்லை என்றார்.

“உண்மையில், இதுபோன்ற பதிவுகள் காவல்துறையினரின் மீதான தவாறான புகார்களில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்” என்று கூறினார்.

‘அடக்குமுறை’

அதோடு மலேசிய சோசியலிச்ட் காட்சியின்  துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், ஹம்சாவின் அறிக்கை அடக்குமுறையாகத் தோன்றுவதாகா கூறினார்.

எந்த விதமான காணொளி பதிவும் தண்டனைக்குரிய குற்றம் என்று பிரிவு 186 இன் கீழ் குறிப்பிட்ட குறிப்பு எதுவும் இல்லை என்றார்.

பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன்

“வீடியோ மற்றும் படங்களை பதிவு செய்வது குற்றம் என்று எங்கும் குறிப்பிடவில்லை, எனவே இது உள்துறை அமைச்சரின் அகநிலை பார்வை, இது சட்டப்பூர்வ தந்திரத்தை விட பயமுறுத்தும் தந்திரம் போல் தெரிகிறது.”

தொழில்ரீதியாக தங்கள் கடமைகளைச் செய்யும் காவல் துறையினர் காணோளியில் பதிவு செய்யப்படுவார்கள் என்று பயப்படுவதற்கு எந்தக் காரணமும் இருக்கக்கூடாது என்ற சைட்டின் கருத்தையும் அவர் எதிரொலித்தார்.

“இன்றைய உலகில், பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான உலகத்தை உருவாக்குவதில் கேமராக்களும் சமூக ஊடகங்களும் முக்கியமான ஆயுதங்களாக இருக்கின்றன.”

இதை தவறாகவும் முறைகேடாகவும் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அருட்செல்வன்.