பிற மொழித் திறன் கொண்ட அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு

சர்வதேச விழாக்களில் மலாய் மொழியைப்  “பெரியதாக” பயன்படுத்த நோக்கம் இருந்தபோதிலும், வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்துவதற்கான மாதாந்திர உதவித்தொகையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், புத்ராஜெயா ஆங்கில மொழித் திறன் கொண்டவர்களுக்கு எந்த உதவித்தொகையையும் வழங்குவதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.

தகுதியுடைய அரசு ஊழியர்கள் தலா இரண்டு வெளிநாட்டு மொழிகளுக்கு உரிமை கோர அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொது சேவைத் துறைத் தலைவர் முகமட் ஷபீக் அப்துல்லா, இடைநிலைச் சான்றிதழ்களைக் கொண்டவர்களுக்கு மாதந்த்தோரும்  உதவிதொகையாக ரிங்கிட்150 லிருந்து 200 ஆக உயர்த்தப்படும் என்று, செய்தியாளர்களிடம் கூறினார்.

உயர்நிலைத் தகுதிகளைப் பொறுத்தவரை, ரிங்கிட்250 ஆக இருந்த ஊக்கத்தொகை அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ரிங்கிட்300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஷபிக் கடந்த வாரம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்தார்.

வெளிநாட்டு மொழி திறன்களுக்கான சிறப்பு சலுகைகள் முதன்முதலில் 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சலுகைககளுக்கு தகுதிபெறும் மொழிகள் அரபு, மாண்டரின், ஜப்பானியம், பிரஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் மற்றும் அவர்கள் பணியாற்றும் நாட்டின் பிற அதிகாரப்பூர்வ மொழிகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளின் விரிவாக்கத்திற்கு ஏற்ப, வெளிநாட்டில் ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக விவாதங்களை எளிதாக்குவதற்கு வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்துவது முக்கியம்” என்று ஷபிக் கூறினார்.

உதவித்தொகைக்கு தகுதியுடையவர்கள் வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் மலேசியாவில் சர்வதேச ஒப்பந்தங்கள் அல்லது வர்த்தக கலந்துரையாடல்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாட்டில் இருக்கும்போது வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் இருக்கும் காலத்திற்கு தகுந்த மதிப்பிடப்பட்ட அடிப்படையில் பணம் வழங்கப்படும்.

“வெளிநாட்டில் சேவை செய்துவிட்டு திரும்பிய அதிகாரிகள், இனி வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை,

அவர்களின் ஊக்கத்தொகை பின்பு நிறுத்தப்படும், ”என்று அவர் கூறினார்.

பிப்ரவரியில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மலேசியப் பிரதிநிதிகள் தேசிய மொழியை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சர்வதேச கூட்டங்கள் உட்பட, தாங்கள் ஈடுபடும் ஒவ்வொரு உத்தியோகபூர்வ விழாவிலும் மலாய் மொழியைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவித்தார்.

இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கூட்டு செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் போது மலாய் மொழியை பயன்படுத்தியதாக இஸ்மாயில் கூறினார்.

 

 

-FMT