அரசாங்கத்தின் “பலவீனங்களும்” “ஊழல் நடைமுறைகளும்” மலாய் சமூகத்தை பிளவுபடுத்தி விட்டதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா ஒரு முறை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
அந்தத் தகவலை ஹாருஸ்ஸானியே இன்று வெளியிட்டுள்ளார்.
“நான் நஜிப்பிடம் கூறினேன், டத்தோ ஸ்ரீ அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருப்பதாலும் நம்பிக்கையை மீறி விட்டதாலும் ஊழலாக இருப்பதாலும் மலாய்க்காரர்கள் பிளவுபட்டுள்ளனர்,” என ஹாருஸ்ஸானி சொன்னார்.
அவர் இன்று ஷா அலாமில் சமய அறிஞர்களின் பணி குறித்து நிகழும் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இரண்டாவது துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஹுசேன் பதவியிலிருந்த காலம் தொட்டுத் தாம் நாட்டின் தலைவர்களுக்குக் கட்சிச் சார்பற்ற அறிவுரைகளை வழங்கி வந்துள்ளதாக அவர் சொன்னார்.
நஜிப்புக்கு அவர் வழங்கிய அறிவுரை குறித்து விவரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது வெளிப்படையாகப் பேசக் கூடிய ஹாருஸ்ஸானி மறுத்து விட்டார்.