எல்சிஎஸ் ஊழலில் இருந்து நஜிப்பால் தப்பிக்க முடியாது – ரஃபிசி

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக் கடலோர போர் கப்பல் எல்சிஎஸ் ஊழலில் “தப்பிக்க முடியாது” என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியுள்ளார்.

2011 இல் பௌஷ்டேட் நொவல் ஷிப்யார்ட் உடன் எல்சிஎஸ்  திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டபோது, ​​ கடற்படையின் தேவைகளுக்கு ஏற்ப  கப்பலின் வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்ட ஒரே நபர் அப்பொழுது பதவியில் இருந்த நஜிப் தான் என்பதால், இதிலிருந்து இவர் தப்ப முடியாது என்று ரஃபிஸி கூறினார்.

நஜிப் DCNS உடன் முந்தைய பரிவர்த்தனைகளை கொண்டிருந்ததால், அதன் சேவைகளை மற்ற தேசிய “மெகா” திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.

எல்சிஎஸ்  திட்டத்திற்கான துணை ஒப்பந்ததாரர், DCNS இப்போது கடற்படை குழுவாக அறியப்படுகிறது. இதே நிறுவனம் 2002 இல் இரண்டு ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களையும் மலேசியாவிற்கு விற்றது.

இது பிஎன்எஸ் உடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பே, கரையோரப் போர்க் கப்பல்களுக்கான ஒப்பந்தம் “தீர்மானிக்கப்பட்டது” என்ற தோற்றத்தை அளித்தது. இதைத்தொடர்ந்து கசிந்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக ரஃபிசி தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள், கப்பல்களின் வடிவமைப்பு குறித்த கடற்படையின் கருத்துக்களை அமைச்சகம் மற்றும் பிஎன்எஸ் புறக்கணித்தது, கப்பல்கள் கொள்முதல் செய்வதில் அரசியல் தலையீட்டை பரிந்துரைத்தது.

“அதனால்தான், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இந்த ஊழலில் இருந்து தப்பிக்க முடியாது என்று நான் கூறினேன், இது சம்பந்தமாக  எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க நஜிப்பை அழைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

வியாழனன்று, பொதுக் கணக்குக் குழுத் தலைவர் வோங் கா வோ., எல்சிஎஸ் திட்டம் குறித்த கடற்படையின் கருத்துக்களை பாதுகாப்பு அமைச்சகமும் பிஎன்எஸும் புறக்கணித்தது.

புத்ராஜெயா இந்த திட்டத்திற்காக ரிங்கிட் 6 பில்லியன் செலவிட்ட போதிலும் ஒரு கப்பல் கூட முடிக்கப்படவில்லை, இது பிஎன்எஸுக்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கப்பட்டது என்று வோங் கூறினார்.

இந்தத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இந்த வழக்கை இன்னும் விசாரித்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.

-FMT