பாஸில் மீண்டும் இனைய விருப்பத்துடன் உள்ளதாக கைருடின் அமன் ரசாலி அறிவிப்பு

பெர்சத்துவுடன் ஒத்துழைத்ததால் அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறியபோதிலும், தான் இன்னும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை உயர்வாக கருதுவதாக, கைருடின் அமன் ரஸாலி தெரிவித்துள்ளார்.

“இன்னும் அவர் என் ஆசிரியர்.நான் ராஜினாமா செய்ததில் இருந்து சிறிது காலம் அவரைப் பார்க்கவில்லை அதனால் எனது கருத்துக்களுடன்  எந்த அளவிற்கு அவருடன் உடன்படவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. அவரை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அவர் பத்திரிக்கையிடம் கூறினார்.

பெர்சத்துவை விட அம்னோவுடன் ஒத்துழைக்கக் கட்சிக்கு ஆதரவாக இருந்த பாஸ் தலைவர்களில் அவரும் ஒருவர்.பாஸ்  ஸ்யூர கவுன்சிலின் செயலாளராக இருந்தும் அதன் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 14 அன்று கைருடின் பாஸிலிருந்து விலகினார்.

முன்னாள் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சர், ஒரு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், தனது இதயம் இஸ்லாமியக் கட்சியில் நிலைத்திருப்பதாகவும், மீண்டும் அம்னோவுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், பாஸ் கட்சிக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாஸ் மற்றும் அம்னோ இடையேயான உறவில் விரிசல் இருந்தபோதிலும், ஜூலை மாதம் தெரெங்கானு பெரிக்கத்தான் நேஷனல் தொடங்குவதற்கு முன்பு ஹாடி முன்னாள் பிரதமரும் பாரிசான் நேஷனல் ஆலோசகருமான நஜிப் ரசாக்கை சந்தித்தார் என்றும் அவர் கூறினார்.

அந்த சந்திப்பு, கைருடின் கருத்துப்படி, அம்னோ மற்றும் பாஸ் இடையே சாத்தியமான ஒத்துழைப்பைத் தொட்டது. பாஸ் இன்னும் அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது என்று தான் நம்புவதாகவும் ஆனால் அம்னோ “எச்சரிக்கையுடன்” இருப்பதாக அவர் கூறினார்.

ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் உயிருடன் இருந்த காலத்துடன் ஒப்பிடும்போது, ​​ஹாடியின் கீழ் பாஸ் வழி தவறிவிட்டதாக அவர் உணர்ந்தாரா என்பது குறித்து, கைருடின் தலைமைத்துவ பாணிகள் மட்டுமே மாறிவிட்டது.

“ஒவ்வொரு தலைவருக்கும் அவரவர் வழி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளன, ஆனால் இஸ்லாமிய போதனைகளை அடிப்படையாகக் கொண்ட பாஸின் கொள்கைகள் அப்படியே இருக்கின்றன, ” அரசியல் மூலோபாயத்தால் கட்சியை விட்டு விலகினனே தவிர கொள்கைகளை  அல்ல என்று அவர் கூறினார்.

 

-FMT