மியான்மார் அகதிகளுக்கு வழங்கப்படும் திறன் பயிற்சிக்கான செலவை ஈடுகட்ட வெளிநாட்டு நிதியை அரசு பயன்படுத்துகிறது.
நாட்டில் அகதிகள் திறன்களைப் பெற உதவும் முயற்சியில் அரசாங்கம் பொது நிதியைப் பயன்படுத்தாது என்று வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா கூறினார்.
அவரின் கருத்துப்படி, மியான்மர் அகதிகளுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது, காரணம் அவர்களுக்குத் தேவையான திறன்கள் இல்லை.
“தற்போது வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. பல உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் துறைகள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர் நோக்கி உள்ளனர்.
“இதனால், பொது நிதியைப் பயன்படுத்தாமல், வேலை செய்ய விரும்பும் சிலருக்கு திறன் பயிற்சித் திட்டத்தை நாங்கள் திட்டமிடுகிறோம். எனவே, அந்த நிதியை எப்படிப் பெறுவது என்று நாங்கள் யோசித்து வருகிறோம். வெளிவிவகார அமைச்சர் என்ற முறையில் நானும் பிற நாடுகள் மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களிடம் இருந்து நிதியைப் பெற முயற்சித்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
சைபுடின் மேலும் கருத்து தெரிவிக்கையில், இதுவரை 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை (RM220 மில்லியன்) செலுத்திய நாடுகளில் கத்தார்(Qatar) ஒன்றாகும், அதில் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அகதிகள் சுகாதார விஷயங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள அகதிகள் மற்றும் வேலை மற்றும் கல்விக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வெளியுறவு அமைச்சர் பேசும் போது மலேசியர்கள் வருத்தமடையாமல் இருக்க இதை நான் குறிப்பிடுகிறேன் என்றார்.
“நாங்கள் பொதுமக்களின் பணத்தை ஒருபோதும் பயன்படுத்தவில்லை, இவை அனைத்தும் வெளி நாடுகளின் பங்களிப்புகளைப் பயன்படுத்தி வெளியில் இருந்து வரும் நிதியிலிருந்து செயல்படுகிறது,” என்று மேலும் கூறினார்.