துங்கு அப்துல் ரஹ்மானின் மூத்த மகள் காலமானார்

முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜின்(Tunku Abdul Rahman Putra Al-Haj) மூத்த மகள் துங்கு கதீஜா(Tunku Khadijah), நுரையீரல் புற்றுநோயால் நேற்று கோலாலம்பூரில் உள்ள பந்தாய் (Pantai Hospital) மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 89.

துங்கு கதீஜாவின் மகள் ஷரிபா மென்யலாரா ஹுசைன்(Sharifah Menyalara Hussein) கூறுகையில், அவரது தாயார் உயிர் மாலை 6.50 மணியளவில் பிரிந்தது என்றார்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அவர் இறந்துவிட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனது தாயாருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, ”என்று கூறினார்.

புக்கிட் கியாரா முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் தனது தாயின் உடல் கோலாலம்பூர் மசூதிக்கு கொண்டு வரப்படும் என்று ஷரீபா மென்யலரா கூறினார்.

துங்கு கதீஜாவுக்கு மூன்று மகள்களும் ஏழு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.