நஜிப்பின் கூடுதல் ஆதாரங்கள் முயற்சியை உச்ச நீதிமன்றம் தூக்கி எறிந்தது

முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதியான நஸ்லான் அவர்களின் தீர்ப்பு சந்தேகத்திற்குறியது காரணம் அவர், இதற்கு முன்பு இந்த வழக்கு சம்பந்தப்ப்ட்ட மலாயன் வங்கியில் வேலை செய்துள்ளார் என்ற வாதத்தை உச்ச நீதி  மன்றம் தள்ளுபடி செய்தது. நஸ்லானின் தீர்ப்பில் எந்த நடைமுறை குறையையும் காணவில்லை என்றது.

எனவே, ரிம 4.2 கோடி ஊழல் வழக்கில் நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனை மற்றும் தண்டனையை ரத்து செய்யக் கோரிய முக்கிய முறையீட்டை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 5 பேர் கொண்ட பெடரல் நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் புதிய ஆதாரங்களைச் சேர்க்க முன்னாள் பிரதமர் செய்த விண்ணப்பத்தை இன்று ஏகமனதாக நிராகரித்தது. இந்த அமர்வில் சபா மற்றும் சரவாக் சார்ந்த அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம், கூட்டரசு  நீதிமன்ற நீதிபதிகள் பி நளினி,  மேரி லிம் தியாம் சுவான் மற்றும் முகமது ஜாபிடின் முகமட் தியா அடங்குவர்.

சம்பந்தம் இல்லை

நஸ்லானின் தீர்ப்பைப் படித்துப் பார்க்கையில், நஜிப் தண்டிக்கப்பட்டது ஒரு அதிகார துஷ்பிரயோகம், மூன்று குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் மூன்று பணமோசடி ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுடன் நஜிப்பின் இந்த கூடுதல் ஆதாரங்களின் அவசியத்தை அதில் காணாமுடியவில்லை என்று தெங்கு மைமுன் கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்

“நஸ்லானின் முடிவுகளில் எந்தவொரு முரண்பட்ட அல்லது பாரபட்சமான கருத்துக்கள் இல்லை. விசாரணையில் நீதிபதி தனது முடிவை பதிவில் உள்ள ஆதாரங்களைத் தவிர வேறு எதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று நம்புவதாக தலைமை நீதிபதி கூறினார்.

“மேபேங்கில் நஸ்லானின் முந்தைய வேலைக்கும் விண்ணப்பதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் மேலும் கண்டறிந்துள்ளோம்.”

“நஸ்லானின் கண்டுபிடிப்புகள் சரியானதா இல்லையா என்பது, பதிவில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், முக்கிய மேல்முறையீட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயமாகும்” என்று அவர் தீர்ப்பளித்தார்.

ஜூலை 28, 2020 அன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப்பை SRC இன் 42 மில்லியன் ரிங்கிட் நிதி சம்பந்தப்பட்ட ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவித்தது.

எனினும், தண்டனையை நிறைவேற்றிய நஸ்லான், மேல்முறையீட்டு மனுவைத் தீர்ப்பதற்கு நிலுவையில் உள்ள தண்டனையை நிறைவேற்றுவதைத் தடுத்து முறையீட்டு முயற்சியை அனுமதித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, நஜிப்பின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

நஜிப் SRC இன் ஆலோசகராகவும், 1MDB இன் ஆலோசகர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.