படிப்பதற்கான சீன குடியிருப்பு அனுமதிகளை வைத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று மலேசியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று ஒரு முகநூல் பதிவில், சீனாவில் நீண்டகால கல்வி பெறும் மலேசிய மாணவர்களிடமிருந்து விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு திரும்புவதற்கு சீன அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. “சீனா மற்றும் மலேசியாவின் பொறுப்பான துறைகள் மலேசிய மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவதில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன, மேலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளன,” என்று அது கூறியது.
தூதரக வலைத்தளம் மற்றும் தொடர்புடைய தளங்களில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்புகளுக்குப் பயணிகள் கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, கோவிட் -19 ஊரடங்கு காரணமாகச் சுமார் 8,000 மலேசிய மாணவர்கள் தங்கள் படிப்பை மீண்டும் தொடங்க சீனாவுக்குத் திரும்ப முடியவில்லை.