முன்னாள் மத விவகார அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா (Mujahid Yusof Rawa), முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தனது தற்போதைய சட்டப் போராட்டங்கள் தொடர்பாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
நேற்று கம்புங் பாரு மசூதியில் உறுதிமொழி எடுத்த நஜிப்பின் நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது. அவர் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது அவரது ஆதரவாளர்களிடையே மத உணர்வுகளைப் பறை சாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இது இருந்தது.
அவரது மேல்முறையீட்டை ஒத்திவைக்கப் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து அவர் இதை நாடினார்.
“ஒரு மதப் பேச்சாளர் உட்பட அவரது உறுதிமொழியைக் காண அவர் தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டியது இன்னும் வருத்தமளிக்கிறது, “என்று அவர் கூறினார்.
நேற்று, கோலாலம்பூரில் அமைந்துள்ள கம்புங் பாரு மசூதியில் நஜிப் சும்பாஹ் முபஹலா(sumpah mubahalah) சத்தியப்பிரமாணத்தை ஓதினார்.
நஜிப் தனது பிரமாணத்தில், SRC இன்டர்நேஷனல் Sdn Bhd-ல் இருந்து தனது கணக்கிற்கு மாற்றப்பட்ட RM42 மில்லியன் என்பதை உணரவில்லை என்று கூறினார்.
“நான், முகமது நஜிப் அப்துல் ரசாக், இந்தப் பூமியில் எனது நீதிக்காகப் போராடிய பிறகு, என் சத்தியப்பிரமாணத்தை ஓதுகிறேன்”.
SRC இல் இருந்து வந்த ரிம42 மில்லியன் தொகையைப் பற்றி நான் எந்த நேரத்திலும் அறிந்திருக்கவில்லை. தனிப்பட்ட அல்லது உறவுகளின் பயன்பாட்டிற்காக எந்தவொரு நிதியையும் எடுக்கும் நோக்கத்திற்காக SRC யை நிறுவ நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை.
“எந்தவொரு காரணத்திற்காகவும் எனது சொந்த வங்கிக் கணக்கில் நிதியைத் தவறாகப் பயன்படுத்துமாறு நிறுவனத்தின் இயக்குநர்கள் எவருக்கும் நான் ஒருபோதும் உத்தரவிடவில்லை,” என்றும் பெக்கான் எம்.பி அறிவித்தார்.
அந்தக் குறிப்பில், முஜாஹிட் இந்த விஷயத்தில் நஜிப்பின் அணுகுமுறைகுறித்து தான் கவலைப்படுவதாகவும், தனது நீதிமன்ற வழக்கில் மதத்தை இழுக்க வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.
முன்னாள் மத விவகார அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா
நஜிப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்த அணுகுமுறைகுறித்து நான் கவலைப்படுகிறேன். நாம் விரும்பும் மலாய்க்காரர்களின் தனமைகள் இவையா அல்லது மிகவும் கண்ணியமான மற்றும் மத விழுமியங்களைத் தங்களால் இயன்றவரை உயர்த்திப் பிடிக்கும் மலாய்க்காரர்களை நாம் விரும்புகிறோமா?
குறுகிய இன மற்றும் மத உணர்வுகளைப் பயன்படுத்தி உணர்ச்சிகளை விளையாடக்கூடிய மலாய்க்காரர்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை
“உச்ச நீதிமன்றத்தை நம்புமாறு அனைத்து மக்களையும் நான் அழைக்கிறேன். அவர்கள் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவார்கள்,” என்று பரிட் பண்டர் (Parit Buntar) எம்.பி கூறினார்.