புதருக்குள்ளிருந்து மீட்ட ஒராங் அஸ்லி சிறுமியின் உடல் – ஒரு கொலை என சந்தேகம்

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் 14 வயது ஓராங் அஸ்லி சிறுமியின் உடல், ஞாயிற்றுக்கிழமை பகாங்கின் ரோம்பின் புக்கிட் இபாமில் உள்ள அவரது வீட்டின் அருகே புதர்களுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்டது.

அன்றைய தினம் பிற்பகல் 2.45 மணியளவில் காவலர்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைக்குச் செல்லாத சிறுமியின் சடலம் அவரது உறவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக ரொம்பின் காவல்த்துறை தலைவர் அஸாஹரி முக்தர் தெரிவித்தார்.

சிறுமியின் தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன.

“பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை இரவு தனது வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது தந்தை காணாமல் போனோர் குறித்து புகார் அளித்துள்ளார்” என்று அசாஹரி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக மூன்று ஒராங் அஸ்லி ஆண்கள் நேற்று இரவு 9.40 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் இன்று ரொம்பின் நீதவான் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

 

 

-FMT