நஜிப் குற்றவாளி –  12 ஆண்டு சிறைத்தண்டனை இன்று தொடங்கிகிறது

நஜிப் அப்துல் ரசாக் தனது 12 ஆண்டு கால சிறைத்தண்டனையை இன்று தொடங்க உள்ளார். மேலும், ரிம 21 கோடி அபரா தொகையை கட்டத்தவறினால் மேலும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனையை ரத்து செய்ய முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டை தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஒருமனதாக தள்ளுபடி செய்தது.

சபா மற்றும் சரவாக் அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் மற்றும் மூத்த நீதிபதிகள் பி நலினி, மேரி லிம் தியாம் சுவான் மற்றும் முகமது ஜாபிடின் முகமட் தியா ஆகியோர் மற்ற உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதிகளாக   இருந்தனர்.

ஜூலை 28, 2020 அன்று, கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம் ஒரு அதிகார துஷ்பிரயோகம், மூன்று குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT) மற்றும் மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளில் நஜிப்பை குற்றவாளி எனக் கண்டறிந்து, தண்டனையை விதித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, நஜிப்பின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. அதனை அடுத்து இறுதியாக உச்ச நீதிமன்றம் இறுதியாக அவரின் முறையீட்டை தள்ளுபடி செய்து, அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்துள்ளது.