மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் பொருள் கஞ்சாவின் சுயதேவை பொழுதுபோக்கு பயன்பாடு சட்டவிரோதமாக இருக்கும்
சேகரிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் கஞ்சா மருத்துவ பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதைக் காட்டினால், நாங்கள் ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பையும் மருத்துவ நடைமுறை வழிகாட்டுதலையும் வரைவோம்.
“சுய தேவை பொழுதுபோக்கு பயன்பாடு கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது உறுதி, “என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறினார்.
கைரி (மேலே) மருத்துவ பயன்பாட்டிற்காகக் கஞ்சா மற்றும் கெட்டம் ஆகியவற்றின் சாத்தியமான பயன்பாட்டை மதிப்பிடுவதற்கு தாய்லாந்திற்கு நான்கு நாள் வருகை மேற்கொள்ள உள்ளார்.
இது தாய்லாந்தின் துணைப் பிரதமரும் பொது சுகாதார அமைச்சருமான அனுடின் சார்ன்விரகுலின் அழைப்பின் பேரில் உள்ளது.
தாய்லாந்தில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது
பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் கஞ்சாவை வளர்ப்பதையும் நுகர்வதையும் சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவில் தாய்லாந்து முதல் நாடு.
இருப்பினும், கஞ்சா தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) உள்ளடக்கம் மிகவும் கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் 0.2% மேல் இருக்க முடியாது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
THC என்பது கஞ்சாவின் மனோவியல் கூறு ஆகும்
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான தாய்லாந்தின் நடவடிக்கை அதன் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதாகும், ஆனால் பொதுவில் கஞ்சாவை புகைப்பது இன்னும் பொது சுகாதார சட்டங்களை மீறக்கூடும்.
இது 2018 இல் மருத்துவ கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியது.
1,000 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உள்ளடக்கிய கஞ்சா தொழில் 2026 ஆம் ஆண்டளவில் 435.16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM1.95 பில்லியன்) சம்பாதிக்கும் என்று தாய்லாந்து அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
பாடகர் மற்றும் இசையமைப்பாளர் யாசின் சுலைமான்
இதற்கிடையில், பல மலேசியர்கள் மருத்துவ கஞ்சாவை விநியோகித்ததற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
அவர்களில் ஒருவரான அமிருதீன் @ நடராஜன் அப்துல்லா, 63, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார், அவர் தனது புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்க மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னர் 39 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
பாடகரும் இசையமைப்பாளருமான யாசின் சுலைமான் தனது வீட்டில் 17 கஞ்சா செடிகளைப் பயிரிட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
அவரது மனக் குழப்பம் கோளாறுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவ நோக்கங்களுக்காக அவர் இதைப் பயன்படுத்துவதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டதால் யாசின் தப்பினார்.