வெளிநாடுகளில் உள்ள அதிக திறன் வாய்ந்த மலேசியர்களை, மலேசியாவிற்கு அழைத்து வர வேண்டும்

திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மலேசியா உள்ளூர் திறமைகளை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள ஏராளமான மலேசியர்கள் தங்கள் திறமை மற்றும் செயல் திறன்களுக்காக  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு  திரும்பவும் அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான Asia Retail Academy Sdn Bhd இன் தலைவர் லிங்கேஷ் லெச்சமனன் தெரிவித்துள்ளார்.

“நாட்டிற்கு சவாலாக இருப்பது வெளிநாட்டு திறமைகளை ஈர்ப்பது எப்படி என்பதல்ல, மாறாக வெளிநாட்டில் இருக்கும் திறமையான மலசியர்களை மலேசியாவுக்கு எப்படி திரும்பப் பெறுவது என்பதுதான்.

“அதிக திறமையான வெளிநாட்டு மக்களை கொண்டு வருவதற்கான மலேசியாவின் உத்தியானது ஒரு இடைநிறுத்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், அதே நேரத்தில் உள்ளூர் திறமைகளை மேம்படுத்துவதற்கும் மேலும் பல திறமையான மலேசியர்கள் நாடு திரும்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறினார்.

தற்போது வெளிநாட்டில் உள்ள திறமையான மலசியர்களை கவரும் வகையில் குறைக்கப்பட்ட தனிநபர் வருமான வரி மற்றும் பிற பண சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றார் லிங்கேஷ்.

நீண்ட காலத்திற்கு, பொருளாதாரம் பெரும்பாலும் இவர்களால்  இயக்கப்படலாம், இது மிகவும் நிலையான பணியாளர்களை உருவாக்கும்.

திறமையான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் ஜப்பான் மற்றும் பிற முன்னேறிய பொருளாதாரங்களைச் சேர்ந்த ஒரு மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு அடுத்த மாதம் முதல் 10 வருட விசாவை அறிமுகப்படுத்த தாய்லாந்து முடிவுசெய்துள்ளது.

ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற முக்கிய துறைகளை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதற்காக நீண்ட கால விசா வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பர்ஜாய் பர்டாய் துன் அப்துல் ரசாக், மலேசியாவிற்கு இவ்வளவு பெரிய அளவிலான வெளிநாட்டு நிபுணத்துவம் தேவையில்லை என்பதால், மலேசியாவிற்கு இதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றார்.

மாறாக, அதிக மதிப்புள்ள துறைகளில் உள்ளூர் திறமைகளை வளர்க்கவும், ” அவைகளை மேன்படுத்தவும்” வெளிநாட்டவர்களின் திறமைகளை பயன்படுத்த தேவை உள்ளது என்று அவர் கூறினார்.

“சில்லறை விற்பனை, தங்குமிடம், விருந்தோம்பல் மற்றும் மொத்த விற்பனை மற்றும் நான்காவது தொழில்துறை புரட்சியை (IR 4.0) ஊக்குவிக்கும் நிறுவனங்களில் சேவையாற்ற ஆற்றல் உள்ளவர்கள் தேவை”,என்கிறார்

-FMT