அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்க உள்கட்சி அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவது அனைத்தும் பொய் என்று அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அம்னோவை சீர்குலைக்க நினைப்பவர்களால் இந்தக் கூற்றுகள் பரப்பப்பட்டதாக துணைத் தலைவர் மஹட்சிர் காலிட் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் “ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை” என்று சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமர் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
கட்சியின் உள்விவகாரங்களில் “அவதூறான” அறிக்கைகள் தொடர்பாக மலேசியாகினி மற்றும் அஸ்ட்ரோ அவானிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அம்னோ இளைஞர் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
“இதெல்லாம் ஒரு பொய், பிரதமர் இஸ்மாயில் மீது இரக்கமில்லாமல் இதை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்களும் இருக்கிறார்கள். அம்னோவை பிளவுபடுத்துவதற்கு தற்போதைய சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள சிலர் நினைக்கிறார்கள் என்று மஹ்ட்சிர் கூறினார்.
கட்சித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியிடம் நாளை நடைபெறும் சிறப்பு மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கட்சியை வலுப்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.
ஜாஹிட் நாளை கட்சியின் தலைமையகத்தில் பிரதேச குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு சிறப்பு உரையொன்றை ஆற்றவுள்ளார்.
அம்னோ சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினரான நோ, இஸ்மாயிலை பதவி நீக்கம் செய்ய அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
இஸ்மாயிலும் ஜாஹிட்டும் நெருக்கமாக இருப்பதாக அவர் கூறினார். “இதற்கு முன், அரசியல் குழுக் கூட்டம் நடந்தால், கூட்டத்தைத் தொடங்கும் முன் அவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வதை நான் நேரில் பார்த்திருப்பேன். அம்னோவுக்குள் குழுக்கள் இருப்பதாக யாராவது கூறினால் அது உண்மையல்ல,” என்றும் அவர் கூறினார்.
-FMT