அவசரகாலப் பிரகடனங்களை மீட்டுக்கொள்ளும் தீர்மானம் ஏற்கப்பட்டது

இன்று டேவான் நெகாரா, 1966,1969,1977 அவசரகாலப் பிரகனங்களை மீட்டுக்கொள்ளும் தீர்மானமொன்றை ஏற்றுக்கொண்டது.

1969 ஆம் ஆண்டு அவசரகாலப் பிரகடனம், 1969 மே 13 இனக்கலவரங்களை அடுத்து மே 15ஆம் நாள் விடுக்கப்பட்டது.

1966 செப்டம்பர் 14, சரவாக்கிலும், 1977 நவம்பர் 8-இல் கிளந்தானிலும் அரசியல் சர்ச்சைகள் காரணமாக அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது.

அவரசகாலப் பிரகடனங்களை நீக்கும் தீர்மானத்தை மேலவையில் தாக்கல் செய்த பிரதமர்துறை துணை அமைச்சர் லியு வியு கியோங், நாட்டின் பாதுக்காப்புக்கோ, பொருளாதார வாழ்வுக்கோ, பொது ஒழுங்குக்கோ மருட்டலான சூழல் இல்லை என்பதால் அவசரகாலப் பிரகடனங்கள் மீட்டுக்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.

இதன்வழி அவசரகாலப் பிரகடனம் அமலில் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட விதிகள் எல்லாம் ஆறு மாதங்களில் முற்றிலும் செல்லாதவையாகி விடும் என்றாரவர்.

அவசரகாலப் பிரகடனங்கள் மீட்டுக்கொள்ளப்படுவது அரசாங்கம் நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப சட்டங்களைத் திருத்தி அமைத்து நாடு முற்போக்க இருப்பதை உறுதிப்படுத்தத  தயாராக இருப்பதைக் காண்பிக்கிறது என்று லியு குறிப்பிட்டார்.

இதற்குமுன் இம்மூன்று அவசரகாலப் பிரகடனங்களும் நவம்பர் 24-இல், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்-கால் மக்களைவையில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

-பெர்னாமா