அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஸ் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதன் துணைத் தலைவர் நிக் முகமட் அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது வேட்பாளரை பிரதமராக்க அனுமதிக்கும் பெரும்பான்மையைப் பெறுவதே நீண்டகால இலக்கு என்று அவர் கூறினார்.
“கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் இன் 18 நாடாளுமன்ற இடங்கள் பாராட்டத்தக்கவை என்றாலும், தற்போது நாங்கள் பெரும்பான்மையாக உள்ள மூன்று மாநிலங்களில் கட்சியின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது சாத்தியமாகும்,” என்று நேற்றிரவு கட்சியின் தேர்தல் மையத்தை அறிமுகப்படுத்திய பின்பு அவர் கூறினார்.
மார்ச் 2020 இல் பாஸ் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட ஒரு வருடத்தில் “பல்லாயிரக்கணக்கான பில்லியன்கள்” முதலீடுகள் கொட்டிய கெடாவின் உதாரணத்தை நிக் முகமது அமர் குறிப்பிட்டார்.
“குறுகிய காலத்தில் கெடா பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஈட்டியதை பிரதமர் கூட ஒப்புக்கொண்டார்.இவை மூன்று மாநிலங்கள் மட்டுமே. இதன் பொருள் என்ன?
“நாங்கள் மத்திய அரசைக் கைப்பற்றினால், என்ன நடக்கும்? ஒரு பாஸ் பிரதம மந்திரி நிச்சயமாக மூன்று மாநிலங்களின் செயல்திறனை மிஞ்சிவிடுவார்,” என்று அவர் கூறினார்.
“ஒரு பாஸ் தலைவர் நிச்சயமாக ஒரு நாள் பிரதமராகக்கூடும் என்று நான் நம்புகிறேன்.”
கெடாவைத் தவிர, கிளந்தன் மற்றும் தெரெங்கானுவில் மாநில நிர்வாகத்தை பாஸ் கட்டுப்படுத்துகிறது.
-FMT