உட்புற வளாகத்தில்(indoors) முககவசம் அணிவது இப்போது விருப்பமானது – ஆனால் உட்புற வளாக உரிமையாளர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று அறிவித்தார்.
புதிய தீர்ப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது, இருப்பினும் சுகாதார அமைச்சகம் பொதுமக்களை உட்புற வளாகத்தினுள் முககவசம் அணிவதைத் தொடர்ந்து ஊக்குவிப்பதாகக் கைரி கூறினார்.
இ-ஹெய்லிங் கார்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போதும், கிளினிக்குகள், மருத்துவமனைகள் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் போன்ற சுகாதார நிலையங்களிலும், ஒரு நபருக்குக் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டாலும் முககவசங்களை அணிவது இன்னும் கட்டாயமாகும்.
வழிபாட்டுத் தலங்கள், அரங்கங்கள் போன்ற நெரிசலான இடங்களில் அல்லது அறிகுறிகளைக் காட்டும்போது, மற்றும் அதிக ஆபத்துள்ள நபர்கள் உட்புற வளாகத்தில் முககவசங்களை அணிவது ஊக்குவிக்கப்படுகிறது.
கோவிட்-19 நிலைமையை மதிப்பீடு செய்து தற்போதைய தேவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முககவசங்கள் குறித்த புதிய தீர்ப்பு எடுக்கப்பட்டதாகக் கைரி கூறினார்.
மேலும், முககவசங்கள் பயன்பாட்டிற்கான நிலையான இயக்க நடைமுறையை (SOP) தளர்த்துவது, கோவிட்-19 நோய்த்தொற்றின் அபாயத்தை இலகுவாகக் கருதுவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
SOP மாற்றத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிக தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் கூறினார்.