பொது நடவடிக்கை படையின் (PGA9) 9 வது பட்டாலியன், தும்பாட்டில் உள்ள பெங்கலன் ஹராம் போக் என்கோ(Pengkalan Haram Pok Ngoh) அருகே சுங்கை கோலோக் கரையில் உள்ள புதரில் 69 தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு பையை நேற்று கண்டுபிடித்தது.
நண்பகலில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து வந்த PGA9 பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கிளந்தான் காவல்துறையின் பொறுப்பாளர் முஹமட் ஜாக்கி ஹருன் கூறினார்.
“சந்தேகத்திற்கிடமான தோற்றமுள்ள பையில் 10 வகையான.Spl USA, 9mm வகையின் 10 தோட்டாக்கள், வகை 357 Mag USAவின் 30 தோட்டாக்கள், Buck Shot 12 Gauge 16 தோட்டாக்கள் மற்றும் type .22. இன் மூன்று தோட்டாக்கள்,” ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
“பையில் 240 யாபா மாத்திரைகள்(yaba pills), சியாபு (methamphetamine) என்று சந்தேகிக்கப்படும் 20 கிராம் படிக தூள் மற்றும் கஞ்சா விதைகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன, “என்று அவர் இன்று கிளந்தான் போலீஸ் படை தலைமையகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பின்னர் PGA9 குழு சுமார் இரண்டு மணி நேரம் அந்த இடத்தைக் கண்காணித்ததாகவும், ஆனால் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காகக் கோலா ஜம்பு(Kuala Jambu) காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு யாரும் பையை அணுகவில்லை அல்லது எடுக்கவில்லை என்றும் Zaki கூறினார்.
“இந்தப்பல்வேறு வகையான வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களின் மதிப்பு RM5,239 என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் உள்ளூர் சந்தைக்காக அண்டை நாடான தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது”.
“ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1960 இன் பிரிவு 8(a) மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவுகள் 39A(1)மற்றும் 12 (2) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்னொரு தனி நடவடிக்கையில், PGA9 ஞாயிற்றுக்கிழமை தும்பட்டில் உள்ள கம்போங் கெபகாட், வகாஃப் பாருவில்(Kampung Kebakat, Wakaf Bharu, Tumpat) உள்ள ஒரு வீட்டில் ரிம 2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான பல்வேறு வகையான வாப் என்ற புகைப்டிக்கும் கருவிகள் வாப் பொருடகளை கைபற்றியது.
அதிகாலை 12.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், எண் இல்லாத வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன, அங்கிருந்த ஒரு 34 வயதான ஆண் நபரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ரிம2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையவை என்று மதிப்பிடப்பட்டுள்ளன, அவை கிளந்தான் மருந்தகப் பிரிவு, சுகாதார அமைச்சகத்திடம் விசாரணை மற்றும் நச்சுச் சட்டம் 1952 இன் பிரிவு 13(A) இன் கீழ் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.