5.8 மில்லியனுக்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள், அடுத்த பொதுத் தேர்தலின்போது (GE15) அரசியல் மற்றும் வெளிநாட்டு தலையீட்டிற்கான தவறான பரப்புரை, வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் குறிப்புகள்மூலம் தப்பான தகவல்களின் இலக்காக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கப்பட்ட “மலேசியாவில் இளைஞர்களும் தப்பான தகவல்களும்: தேர்தல் நேர்மையை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையில், இளைஞர்களின் அதிக இணைய ஊடுருவல் அவர்களை அரசியல் தப்பான தகவல்களின் இலக்குகளாக ஆக்குகிறது என்று ஆசியா மையம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் வாக்களிக்கும் வயதைக் குறைத்த Undi18 அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து புதிய வாக்காளர்களில் 1.2 மில்லியன் பேர் 18 மற்றும் 20 வயதுடையவர்களாக இருப்பார்கள்.
15 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலமாகச் சிலாங்கூர் 512,588 பேருடன், சபா (353,208) மற்றும் ஜொகூர் (345,719) ஆகிய இடங்களை ஆராய்ச்சி நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
தவறான தகவல் என்பது ஒரு நபருக்கு தெரியாத தகவல், வேண்டுமென்றெ நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக அறிக்கை தப்பானது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
கவனமாக இரு
ஆசிய மையத்தின் பிராந்திய இயக்குனர் ஜேம்ஸ் கோமஸ்(James Gomez), பாலியல் நோக்குநிலை மற்றும் ஒழுக்கக்கேடு, ஊழல், தேர்தல் நேர்மை, பெண் அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு தலையீடு தொடர்பான பொய்களின் வடிவத்தில் தொடர்ச்சியான தவறான தகவல்களின் வடிவங்களில் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
“GE15 இன் போது இதே வகையான தவறான தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம், மேலும் இந்தக் குறிப்பிட்ட தலைப்புகள் தொடர்பான தகவல்களில் கவனமாக இருக்குமாறு அனைத்து மலேசியர்களுக்கும் பரிந்துரைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் ஜர்னலிசம்(Reuters Institutes for the Study of Journalism) மேற்கொண்ட 2021 டிஜிட்டல் செய்தி அறிக்கையையும் அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது, அதில் பதிலளித்தவர்களில் 88% பேர் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இயங்கலை ஊடகங்களைச் செய்தி மற்றும் தகவல்களின் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தினர் என்பதை வெளிப்படுத்தியது.
தப்பான செய்திகளைத் தடுக்க ஒரு தேர்தல் உண்மை சரிபார்ப்பு பொறிமுறையை நிறுவவும், இயங்கலை தகவல்களைச் சரிபார்க்க மலேசியர்கள் பயன்படுத்தக்கூடிய உண்மையின் ஒரு ஆதாரத்தைக் கொண்டிருக்கவும் தேர்தல் ஆணையத்தைக் கோம்ஸ் வலியுறுத்தினார்.
போலிச் செய்திகள் அல்லது தப்பான தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம் அரசியல் கட்சிகள் அரசியல் போட்டியாளர்கள்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்துமாறும், மதத்தை அரசியலாக்குவதை நிறுத்துமாறும் அவர் பரிந்துரைக்கிறார்.