பாலிங் வெள்ளத்தால் தண்ணீர் விநியோகம் தடைபடும் பினாங்கு மக்களுக்கு எச்சரிக்கை

சமீபத்திய பாலிங் வெள்ளத்தால் மீண்டும் சேற்று நீர் பிரச்சனையால் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுத்தக்கூடும் என்பதால் பினாங்குவாசிகள் “எச்சரிக்கையுடன்” இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதே காரணத்திற்காக ஜூலை மாதத்தில் பினாங் மக்கள் மூன்று நாட்கள் தண்ணீர் விநியோகத்தில் தடங்கலை சந்தித்தனர்.

பாலிங்கில் இருந்து வரும் சமீபத்திய சேற்று வெள்ளம், கீழ் கெடாவில் உள்ள மூன்று பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (WTPs) ஒன்றை ஏற்கனவே பாதித்துள்ளது, சுங்கை பெட்டானி WTP ஒரு மணி நேரத்திற்கு முன்பு மூடப்பட்டது.

ஆயிர் தாருல் அமன் என்ற மாநில நீர் நிறுவனமானது, சுங்கை பட்டாணி பகுதியில் உள்ள 35,000 பயனீட்டாளர்களுக்கு  ஏற்கனவே தண்ணீர் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது,

பினாங்கு நீர் வழங்கல் கழக தலைமை நிர்வாக அதிகாரி ஜசெனி மைடின்சா கூறுகையில், பினாங்கில் மற்றொரு அணையில் இருந்து  கலங்கலான நீரை நீர்த்துப்போக பட்டர்வொர்த் ஆலைக்கு கொண்டு வருவதால் நிலைமை கட்டுபாட்டுக்குள்  உள்ளது என்று தெரிவித்தார்.

பட்டர்வொர்த் ஆலை முழு மாநிலத்திற்கும் 80% தண்ணீரை வழங்குகிறது, கெடாவில் இருந்து பாயும் ஒரு நதியான சுங்கை மூடாவிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர். சுங்கை மூடா மற்ற இரண்டு ஆறுகளான குபாங் மற்றும் கெட்டில் ஆகியவற்றுடன் பாலிங்கில் இணைக்கப்பட்டுள்ளது.

மெங்குவாங் அணையிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 300 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆலைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், அது 100% செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 106 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாலிங்கில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் உள்ளனர், படாங் எம்பாங் மற்றும் இபோய் கிராமங்கள்  இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.

இதே பகுதியில் ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 12 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

-FMT