ஜோ லோ என்று நன்கு அறியப்பட்ட தப்பியோடிய களவாடி தொழிலதிபர் லோ டேக் ஜோவைக் கண்டுபிடித்து அவரை நீதியின் முன் நிறுத்துவதற்கான காவல்துறையின் உறுதிப்பாட்டை காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி(Acryl Sani Abdullah Sani) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
லோவின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CCID) ஹாட்லைன் 013-2111222 (WhatsApp மூலம் மட்டும்) அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
“பெறப்பட்ட ஒவ்வொரு தகவலும் அதன் உண்மைத்தன்மைக்காக மதிப்பிடப்பட்டு, சம்பந்தப்பட்ட உறுப்பு நாடுகளிடமிருந்து கூடுதல் சரிபார்ப்பைப் பெறுவதற்கு அனைத்து நாட்டுக் காவல்துறைக்குழுவிற்கு(Interpol) அனுப்பப்படும்,” என்று அக்ரில் சானி நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் டாம் ரைட் மற்றும் பிராட்லி ஹோப் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் லோ (மேலே) மற்றும் அவரது குடும்பத்தினரை வெளிநாட்டில் பார்த்ததாகக் கூறப்படுவதை தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.
லோவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளைப் போலீசார் வலியுறுத்தியுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டில் அவருக்கு எதிராகச் சிவப்பு இன்டர்போல் அறிவிப்பைப் பெற்றுள்ளதாகவும் IGP கூறினார்.
IGP அக்ரில் சானி அப்துல்லா சானி
“சிவப்பு அறிவிப்பு என்பது இன்டர்போல் உறுப்பு நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க முகவர்களால் மட்டுமே அணுகக்கூடிய வகையைச் சேர்ந்தது, ஏனெனில் இன்டர்போல் சந்தேக நபரைப் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் 1MDB நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தப்பியோடிய நபருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்டர்போலின் 195 உறுப்பு நாடுகள், நாடு கடத்தல் செயல்முறையை எளிதாக்குவதற்காக, அவர்களுக்கு எதிராகச் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் தேடப்படும் நபர்கள்பற்றிய தகவலை அனுப்ப வேண்டிய கடமை உள்ளது என்று அக்ரில் சானி கூறினார்.
இருப்பினும், லோவுக்கு எதிராக எந்த நாடுகடத்தல் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை, ஏனெனில் எந்தவொரு இன்டர்போல் உறுப்பினரும் தங்கள் நாட்டில் அவர் இருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்த முடியவில்லை.
“இதுவரை, லோவைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து பெறப்பட்ட ஒவ்வொரு தகவலும் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் காவல்துறையால் அதன் உண்மைத்தன்மைக்காக மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று IGP மேலும் கூறினார்.
முன்னாள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரான ரைட் மற்றும் ஹோப், லோ சமீபத்திய ஆண்டுகளில் சீனாவில் இருந்ததைக் குறிக்கும் பல தகவல்கள் தங்களுக்கு கிடைத்ததாகக் கூறினர்.