பேராக்கின் பிடோரில் நேற்று முதல் காணாமல் போன ஹெலிகாப்டரின் விமானி இன்று காலை விபத்து நடந்த இடத்தில் இறந்து கிடந்தார் என்று பேராக் காவல்துறை தலைவர் முகமது யுஸ்ரீ ஹசன் பஸ்ரி(Mohd Yusri Hassan Basri) தெரிவித்தார்.
இன்று காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முகமது யுஸ்ரி(Mohd Yusri), இன்று காலை 9.30 மணியளவில் ராயல் மலேசிய விமானப்படை (Royal Malaysia Air Force) அதிகாரிகளின் குழுவால் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரின் சிதைவுகள் வானிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.
காலை 9.35 மணிக்கு, RMAF குழுவினர் தங்கள் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி இடிபாடுகளை நோக்கிச் சென்றனர். அங்கு, விமானியின் உடல்லை விமானியின் அறையில் கண்டுபிடித்தனர்.
“விமானி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அவர்கள் நம்பினர்,” என்று அவர் கூறினார்.
மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 58 வயதான ஹாங்காங் குடிமகன் ரிச்சர்ட் சான் ட்ஸ் கின்(Richard Chan Tsz Kin) என்று அடையாளம் காணப்பட்டதாக முகமது யுஸ்ரி கூறினார்.
சிலாங்கூரில் உள்ள சுபாங்கிலிருந்து பேராக்கின் ஈபோவுக்கு Eurocopter EC120B விமானத்தை அவர் ஓட்டிக் கொண்டிருந்தபோது, கோலாலம்பூர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான (KLATCC) ரேடியோ தொடர்பை அது நேற்று பிற்பகல் 12.16 மணிக்கு இழந்தது