இன பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்திற்கு மலேசியா இன்னும் தயாராகவில்லை

இன பாகுபாடு குறித்த சுஹாகாம் தலைவர் ரமாட் முகமாட்டின் விளக்கம்  லிம் கிட் சியாங்  அவர் மீது கொண்ட  சந்தேகங்களை நீக்கியுள்ளது.

ஜூலை மாதம் ரமாட்  நியமிக்கப்பட்டபோது, ​​மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு தலைவரால் வழிநடத்தப்படுவதால், அது “கலங்கிய நீர் போல்” இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக லிம் கூறியிருந்தார்.

ஏனென்றால், 2019 ஆம் ஆண்டில் ரமாட்  இணைந்து எழுதிய ஒரு கட்டுரையையில்  இன பாகுபாட்டை ஒழிக்க கோரும் ரோம் கோட்பாடுகளை ஆட்சியாளர்களின் மாநாட்டு நிராகரிக்க வேண்டும் என்றும் காரணம் அது மலேசியாவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் என்றார்.

இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்கள் போன்ற சர்வதேச குற்றங்களைச் செய்பவர்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ரோம் சட்டம் அமைத்துள்ளது.

இருப்பினும், மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், ரமாட்  ரோம் சட்டத்தையும், அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் நீக்குவதற்கான சர்வதேச மாநாட்டை ICERD எதிர்க்கவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

அந்த நேரத்தில் தேவையான ஏற்பாடுகள் இல்லை என்று உணர்ந்ததால், 2019 ஆம் ஆண்டில் ரோம் சட்டத்தை மீண்டும் அங்கீகரிக்க தான் ஆட்சேபித்ததாக ரமாட்  விளக்கியுள்ளார்.

ரமாட்டின் விளக்கத்தை வரவேற்பதில்,  தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்ட லிம், பெரும்பான்மையான மக்கள் அதை ஆதரிக்கும் வரை மலேசியா இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது மற்றும் இது எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது, ஆனால் இந்தச் சட்டம் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஒரு முன்னேற்றம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் இறுதியில் ICERD ஆதரவு படுதோல்வியான போது DAP   “முற்றிலும் இருளில் இருந்தது” என்று லிம் கூறினார், அப்போது அது  மலாய், இஸ்லாம்  மற்றும் மன்னராட்சிக்கு எதிரானது  என்று குற்றம் சாட்டப்பட்டது.

ICERD மற்றும் Rome Statute fiascos ஆகியவற்றின் படிப்பினைகளில் இருந்து மலேசியா மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுதான் தற்பொழுது ரமாட்டால்  செய்ய முடியும் என்றும் லிம் கூறினார்.

-FMT