இறந்தபிறகு தான் நடவடிக்கை எடுப்பீர்களா ? பாலிங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசம்

இந்த ஆண்டு மட்டும் கிராமத்தில் மூன்று முறை வெள்ளம் ஏற்பட்ட போதிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பாலிங் கெடா, இபோய்  கிராமத்தில் வசிக்கும் மக்கள் பொறுமையிழந்து அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜூலை 4, ஜூலை 28 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் கம்போங் இபோயில் மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டது.

“வெள்ளத்தில் நான்கு பேர் இறந்துள்ளனர், நாங்கள் பார்த்ததெல்லாம் உண்மையான நடவடிக்கைக்கு பதிலாக வெற்று வாக்குறுதிகள்” என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரபியதுல் அதாவியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“பாலம் கட்டப்படும், ஆற்றை ஆழப்படுத்தப் போவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த ஏற்பாடும்  இல்லை? நாங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? நாங்கள் அனைவரும் இறந்த பிறகுதான்   நீங்கள் நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களா?” என்றார்.

ஒவ்வொரு முறையும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது சேதமடைந்த வீட்டுப் பொருட்களை மாற்ற பெரும் செலவு செய்ய வேண்டியிருப்பதால் கிராம மக்கள் கோபமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக ரபியதுல் கூறினார்.

அந்தப் பகுதி தங்குவதற்கு பாதுகாப்பானதா என்பதை அதிகாரிகள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், இந்தப்பகுதி வெடிக்கக் காத்திருக்கும் ‘டிக்கிங் டைம் பாம்’ என்றும் அவர் கூறினார்.

கமல் என்று தன்னை அடையாளப்படுத்திய மற்றொரு கிராமவாசி, கம்போங் இபோய் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி அல்ல என்று கூறினார். புக்கிட் இபோய் மற்றும் சுங்கை குபாங்கைச் சுற்றியுள்ள பல இடங்கள் சமமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கம்போங் தெலுக் சபா, கம்போங் பிசாங், கம்போங் ஹங்கஸ், கம்போங் டெபிங் டிங்கி மற்றும் பெகன் குபாங் ஆகியவை அடங்கும், அதன் குடியிருப்பாளர்கள் இங்கிருந்து நகர முடியாது.

பல நதிகளை ஆழப்படுத்தும் திட்டங்கள் வாக்குறுதி அளித்தபடி நடவடிக்கை எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“தற்காலிக கரைகள் அரிக்கப்பட்டுவிட்டன மற்றும் நதிகள் அவற்றின் முந்தைய நிலையைப் போலவே ஆழமற்றதாகிவிட்டன”.

இதற்கிடையில், சஹாபத் ஆலம் சிக்கின் ஆலோசகர் சோப்ரி ராம்லீ, வெள்ளத்திற்கான காரணம் மற்றும் முசாங் கிங் துரியன் விவசாய நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளை ஈடுபடுத்தி முழுமையான விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

டுரியன் பண்ணை திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த செப்டம்பர் 6 அன்று ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் கிட்டத்தட்ட இடிந்து விழுந்தது. பல குடியிருப்பாளர்கள் நிவாரண மையங்களில் தற்காலிக தங்குமிடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

-FMT