அலோர் ஸ்டாரில் கைரி போட்டியிடுவாரா?

வரும் 15வது பொதுத் தேர்தலில் (GE15) அலோர் ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியில் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின் போட்டியிடலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

பாரம்பரிய MCAவின் தொகுதியான இந்தத் தொகுதியில் சுகாதார அமைச்சரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கெடா அம்னோ தலைவர்களுக்கு இடையிலான சமீபத்திய சந்திப்பின்போது “தனிப்பட்ட முறையில்” விவாதிக்கப்பட்டதாக அலோர் ஸ்டார் அம்னோ துணைத் தலைவர் ஜாம்ப்ரி மாட்(Zambri Mat) வெளிப்படுத்தினார்.

ஜாம்ப்ரியின் கூற்றுப்படி, கைரியின் பெயர் வெளிப்படுவதற்கு முன்பே, அலோர் ஸ்டாரில் அம்னோ தலைவர் முகமட் யூசோப் இஸ்மாயிலை அந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.

“அன்று காலைப் பல உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, யுசோஃப்  (berjiwa besar) மாவட்ட சுகாதார அதிகாரியிடம் தனது அமைச்சர் (கைரி) அலோர் ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதால் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது,” என்று ஜாம்ப்ரி தனது முகநூல் பதிவில் கூறியிருந்தார்.

என் அம்மா கெடாவைச் சேர்ந்தவர்’

கைரி சமீபத்தில் லாங்காவியில் நடந்த ஒரு விழாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கெடாவில்  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள்குறித்து மந்திரி பெசாருடன் (முகமது சனுசி முகமது நோர்) விவாதிக்க மாநிலத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

“எனது தாயார் கெடாவைச் சேர்ந்தவர்” என்று முன்னாள் அம்னோ இளைஞரணித் தலைவர், தற்போதைய ரெம்பாவ்வைத் தவிர வேறு இடங்களில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பீர்களா என்று கேட்டபோது கூறியதாகக் கூறப்படுகிறது.

பதிலுக்கு, சனுசியும் கைரியை மாநிலத்தில் போட்டியிட “வரவேற்றார்”.

GE15ல் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசன் அங்குப் போட்டியிடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், 2008ல் இருந்து தான் வகித்து வரும் ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியைக் காக்கப் போவதில்லை என்று இந்த மாத தொடக்கத்தில் கைரி அறிவித்தார்.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் MCA “மோசமாக” தோல்வியடைந்ததால், தற்போது PKR இன் சான் மிங் காய்(Chan Ming Kai) வைத்திருக்கும் அலோர் ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட யூசப் கடந்த டிசம்பரில் முன்வந்தார்.

64% மலாய் வாக்காளர்கள், சீனர்கள் (23%), இந்தியர்கள் (7%), மற்றும் மற்றவர்கள் (6%) என இத்தொகுதியில் உள்ள வாக்காளர்களின் இனரீதியான அமைப்பைக் கருத்தில் கொண்டு, அம்னோவை களமிறக்குவது BN-க்கு அந்த இடத்தைத் திருப்பித் தருவதில் சிறந்த அர்த்தத்தை ஏற்படுத்தும் என்று யூசோஃப் கூறினார்.