GE15 தேதியில் ‘டாப் 5’ அம்னோ கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது – பிரதமர்

வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெறவிருந்த அம்னோவின் முக்கிய ஐந்து தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று இரவு அறிவித்தார்.

கோலாலம்பூரில் உள்ள மெஜஸ்டிக் ஹோட்டலில் நேற்றிரவு நடந்த ஒரு நிகழ்வின்போது, அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதிகுறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் இருந்ததாகச் செய்தி ஊடகத்திடம் கூறினார்.

“வரும் சனிக்கிழமை இரவு அல்ல. அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  எனவே நாங்கள் அடுத்த தேதிக்காகக் காத்திருக்கிறோம்,” என்று பெரா எம்.பி கூறினார்.

“கட்சியின் பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லான் அடுத்த தேதியை அறிவிப்பார்,” என்று இஸ்மாயில் சப்ரி (மேலே) கூறினார், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசன் முதலில் சனிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார்.

இன்று முன்னதாக, வரவிருக்கும் 15 வது பொதுத் தேர்தல் தொடர்பாகப் பாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பதை முடிவு செய்யக் கட்சியின் உச்ச மன்றம் கூடும் என்று முகமட் கூறினார்.

இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டால் மட்டுமே பாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவது விவாதிக்கப்படும்

“அம்னோ நான் அல்ல, அம்னோ ஒரு கட்சி. எனவே, கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். என் பார்வை முக்கியமில்லை. கட்சி அதை எப்படிப் பார்க்கிறது என்பதுதான் முக்கியம்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.