இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவிருந்த அமானா கட்சி தேர்தல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமானா செயலாளர் முகமது ஹட்டா ரம்லி(Mohd Hatta Ramli) தெரிவித்தார்.
இந்த ஒத்திவைப்பு கட்சியின் தேர்தலை அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் நடத்த அனுமதிக்கும் என்று டாக்டர் முகமட் ஹட்டா கூறினார்.
ஒத்திவைக்க அமைப்பு பதிவுத் துறை (Registrar of Societies) அனுமதி அளித்துள்ளது என்றார்.
“15வது பொதுத் தேர்தலை (GE) எதிர்கொள்வதற்கான முயற்சிகளைத் தயாரிப்பதற்கும், கவனம் செலுத்துவதற்கும் கட்சிக்கு ஒரு வழியை வழங்குவதே இது,” என்று அவர் பெர்னாமாவிடம்,இன்று அமானா தேசிய மாநாடு 2022 இல் சந்தித்தபோது கூறினார்.
2019 முதல் 2022 வரையிலான பதவிக் காலத்திற்கான அமானாவின் முதல் கட்சி தேர்தல், சிலாங்கூரில் உள்ள ஷா ஆலமில் டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் அமானா தேசிய மாநாட்டின்போது நடைபெற்றது.