நஜிப் உடல்நிலை பற்றி சுகாதார அமைச்சர் பகிர இயலாது

நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நஜிப் அவர்களின் உடல்நிலை சார்பான விடயங்களை சுகாதார அமைச்சர் பகிர இயலாது. இது சார்பாக இன்று கருத்து சொன்ன சுகாதார அமைச்சின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஹிஷாம் அப்துல்லா, இனிமேல் நஜிப் சார்பான தகவல்களை பகிர இயலாது என்று அறிவித்தார்.

கடந்த காலங்களில் அவர்களின் உடல்நிலை சார்பாக மாறுபட்ட கருத்துக்கள் ஊடகங்களின் வழி பகிரப்பட்டது. அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வகையில் அவரின் 1எம்டிபி வழக்கு விசாரணையில் தள்ளிவைக்கப்பட்டது.

இன்றுவரை சுதந்திரமாக நடமாடி வந்த அவர், சிறைவாசம் அனுபவிக்கும் காலகட்டத்தில்தான் உடல் நலக் குறைவாக இருப்பதாக அடிக்கடி மருத்துவமனை சென்று வருவது சிலரின் புருவத்தை ஆச்சரியக்குறியாக ஆக்கியுள்ளது.