15- வது பொதுத் தேர்தல் எப்போது?

அமைச்சரவை 15வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறியப்படுகின்றது.

அம்னோ இந்த வருடத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்து வரும் வேலையில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் பொதுத் தேர்தலை அடுத்த வருடத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.

இந்த வருட இறுதி மழைக்காலமாக இருப்பதால் வெள்ளப்பெருக்கு நடைபெறும் என்றும் பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கூறிவருகிறார்கள்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்க்கு முன்னதாகவே பொது தேர்தல் தேதியை முடிவு செய்ய வேண்டும் என்றும் அம்னோ தலைவர்கள் கூறி வருகிறார்கள்

உத்துசான் மலேசிய செய்தியின்படி சுற்றுப்புற சூழல் அமைச்சர் இப்ராஹிம் துவான் இதுவரை அமைச்சரவை இவ்வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை பற்றி எந்த விவாதத்தையும் செய்யவில்லை என்றும், அதோடு வெள்ள பெருக்குக்கு தயாராகும் அதேவேளையில் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கவும் அமைச்சரவை முதன்மை படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார். இப்படித்தான்  அமைச்சரவை முடிவை எடுத்ததாகவும் அறிவித்துள்ளார்.