எதிர்கட்சியினர் வெள்ளத்திற்கு பயப்படுகிறீர்களா, இல்லை வாக்காளர்களுக்கா ? ஜாஹிட் கேள்வி

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, 15வது பொதுத் தேர்தலை மழைக்காலத்தில் நடத்துவது குறித்த கவலைகளை எழுப்புவதில் எதிர்க்கட்சிகளின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் பலவீனமாகவும் பயத்துடனும்  இருக்கிறார்கள் என்பதால் , அதிக காலம்  வாங்க முயற்சிக்கிறார்கள் என்பதற்கும் ஆரம்பகால GE15 க்காண  எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனை சான்றாகும்.

“அவர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள், வாக்காளர்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்கு இது மற்றொரு தந்திரமா?” என்று முகநூல் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாகவே தேர்தலை நடத்த வலியுறுத்தி வரும் பாகன் டத்தோ எம்.பி., வெள்ளம் குறித்து எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே அஞ்சினால், மழைக்காலம் தொடங்கும் முன், 15வது பொதுத் தேர்தலை உடனடியாக அழைக்க வேண்டும் ஏற்று கூறினார்.

மேலும் ,வெள்ளத்தின் கணிக்க முடியாத தன்மை 15வது பொதுத் தேர்தலை இப்பொழுது நடத்துவதற்கு ஒரு நல்ல காரணம் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குள் 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அம்னோ இளைஞர் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி விளக்கியதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி ஏற்கனவே தனது நாடு தழுவிய மெகா ரோட்ஷோவைத் தொடங்கிவிட்டதால், நீண்ட பிரச்சார காலம் தேவையில்லை என்றும் பாரிசான் நேஷனல் தலைவரான ஜாஹிட் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17 அன்று, மழைக்காலங்களில் 15வது பொதுத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தால், வெள்ள நீரில் அலையத் தயாராக இருப்பதாக ஜாஹிட் கூறினார்.

இதற்குப் பதிலளித்த டிஏபி எம்பி லிம் லிப் எங் ஜாஹிட்டைக் கடுமையாகச் சாடினார், அந்த நேரத்தில் மக்கள் இறந்தால் அம்னோ தலைவர் அந்தக் குற்றத்தை ஏற்க தயாரா என்று கேட்டார்.

பருவமழை நவம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.

 

-FMT