அன்வார்: சகிப்புத்தன்மையற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட infidel  சொற்களை நிராகரிக்கவும்

மற்றொருவரின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கும் நிலையில் இருக்கக்கூடாது என்ற பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அரசியல் போட்டியாளர்களை “காஃபிர்கள்” அல்லது “Infidel” நம்பிக்கையற்றவர்கள் என்று முத்திரை குத்தும் தொடர்ச்சியான கலாச்சாரத்தை வன்மையாக கண்டித்தார்.

(“Infidel” என்றால் அவிசுவாசி, நம்பிக்கையற்றவர், புறமதத்தவர்,  நாத்திகர், விசுவாசதுரோகம், சுதந்திர சிந்தனையாளர், சுதந்திரவாதி, கருத்து வேறுபாடு கொண்டவர் என்ற பலவகையான வகையில் பொருள் கொள்ளலாம்.)- இருப்பினும் அது பயன்படுத்தப்படும் விதம் அதன் நோக்கம் எதுவாக இருக்கும் எனபதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், முஸ்லிம் அல்லாதவர்களை  காஃபிர்கள் என்று முத்திரை குத்துவது பெரும்பாலும் அரசியல் மற்றும் மிதவாதத்தின் அடிப்படைக் கருத்துக்கு எதிரானது என்று கூறினார்.

மிக சமீபத்தில், பாஸ் கட்சி  தலைவர் அப்துல் ஹாடி அவாங், வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை தனது கட்சி நிராகரித்ததை வலியுறுத்தி, அவர்களில் பலர் “நம்பிக்கையற்றவர்கள் மற்றும் ஒழுக்கம் இல்லாதவர்கள்” என்று கூறினார்.

1974 முதல் 1982  தலைமை வகித்து வழிநடத்திய முஸ்லீம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, குறிப்பாக முஸ்லீம் இளைஞர் இயக்கம் (அபிம்) அமைப்பை உதாரணம் காட்டிய அன்வார், “நான் ஏன் அவர்களுடன் தொடர்பு கொள்ளத் தேர்ந்தெடுத்தேன், காரணம், அவர்கள் இதை மிகவும் மிதமான, ஆனால் அறிவு சார்ந்த பார்வையுடன் கையாண்டார்கள்.

“புகழ்பெற்ற அறிஞர்களின் பாரம்பரிய நூல்களின் அடிப்படையில் அவர்களால் வெளியிடப்பட்ட தீவிரமான படைப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கது” என்று அந்த ஹராப்பான் தலைவர் கூறினார்.

“இஸ்லாமியக் கட்சிகள் (இப்போது), அது அவர்களின் ‘குரு’ சொல்வதைதான் செவிமடுக்க நேரிடுகிறது.”

“அதனால்தான் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் வரும் காஃபிர் மெங்காஃபிர்’ (ஒருவருக்கொருவர் காஃபிர் என்று அழைக்கப்படும்) பிரச்சினை பற்றி பேசும்போது, ​​நான் அதை முழுவதுமாக நிராகரிக்கிறேன்,” என்று அன்வார் கூறினார்.

பாஸ் கட்சி ஹாடியின் 1981-இன் உரையையும் அவர் குறிப்பிட்டார்.அரசியல் உட்பட இஸ்லாத்தை ஒரு முழுமையான வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளாத முஸ்லிம்கள் காஃபிர்கள் என்றும் ஹாதி அப்போது கூறினார்.

“மற்றவர்களின் நம்பிக்கையையோ, முஸ்லிம்களையோ அல்லது முஸ்லிமல்லாதவர்களையோ கேள்வி கேட்பது தேவையற்றது “ என்று அன்வார் வலியுறுத்தினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்

முஸ்லீம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் அதே வேளையில், அபிம் முஸ்லிமல்லாதவர்களுடனான முக்கியமான ஈடுபாடுகள் உட்பட, அதன் பணிகளில் சீராக இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

‘மலேசியாவில் சகிப்புத்தன்மை இல்லை’

மலேசியாவில் உள்ள முஸ்லீம்களிடையே கூட, மாறுபட்ட கருத்துக்களை விவாதிக்க சகிப்புத்தன்மை இல்லாததை அன்வார் குறிப்பிட்டார்.  சில வேளைகளில் “தாராளவாதிகள்” என்று முத்திரை குத்தி உண்மையான புரிதல் இல்லாமல் வெளிப்படையாக நிராகரிக்கின்றனர்.

இந்தோனேசியாவில் கருத்துப் பரிமாற்றம், கொள்கை சார்ந்த விஷயங்களில் சில கருத்துக்களை நிராகரித்தல் தவிர மற்ற தொடர்பைப் பேணுதல் போன்றவற்றுக்கு அதிக இடமுள்ளது என்றார்.

கடந்த மாதம் ஜகார்த்தாவிற்கு அவரது பயணத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது, ​​2005 இல் இறந்த இந்தோனேசிய முஸ்லீம் அறிவுஜீவி Nurcholish Madjid இன் நினைவாக நடத்தப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொண்டதை அன்வார் உறுதிப்படுத்தினார்.