வறுமை, ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கையாளும் போது, ஊழலை புறக்கணிக்கும் மலாய் மற்றும் முஸ்லீம் பெயரில் இருக்கும் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம், காரணம் அவர்கள் நடைமுறையில் அப்படி இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்களுக்கு பரிந்துரைத்துள்ளார்.
அம்னோ மற்றும் பாஸ் கட்சகளை மறைமுகமாக சாடிய அன்வார், இந்தக் கட்சிகள்தான் ஊழலை வளர்க்கின்றன, அதன்வழி தான் வருமான சமத்துவமின்னை வளர்குறது. அதோடு சுற்றுச்சூழலை அழிவும் வெளிப்படுகிறது, இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
“அல்லாஹுஅக்பர், நம் கடுவுளே சிறந்தவர் என்று சொல்லிக்கொண்டு மலாய் மற்றும் இஸ்லாம் என்ற பெயரில் காடுகல் அழிக்கப்படிகின்றன, மலைகள் தரைமட்டமாக்கப்படுகின்றன, என்று 1,000 பிகேஆர் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றிய போது அன்வார் கூறினார்.
“ஆன்மீகத்தை மட்டுமே கவனித்து, ஹிஜாப் அணிந்து ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை செய்பவர்கள்”, ஆனால் அனைத்து வகையான பேராசை, மலைகளை சமன் செய்தல் மற்றும் மரம் திருடுதல் இவைகள் தொடர்ந்து செய்பவர்களை யார் மணிப்பார்கள் ?
மலாய்-முஸ்லிம் கட்சிகளிலிருந்து பிகேஆர் வேறுபட்டது.
மலாய் ஆட்சியாளர்களின் பதவி, தேசிய மொழி, மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் நிலை ஆகியவற்றைப் பாதுகாக்கும் அதே வேளையில், வறுமையைக் கையாளும் போது அனைத்து இனங்களுக்கும் கட்சி கவனம் செலுத்துகிறது.
“அதுதான் எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் மன்னிப்பு கேட்கவில்லை, மேலும் அனைத்து மலேசியர்களின் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் நலனுக்காக நாங்கள் உறுதியாக இருப்போம்.
“இதுதான் நீதி மற்றும் சமத்துவத்தின் பொருள், இருப்பினும் நாங்கள் எதற்கும் நிற்கவில்லை என்பது போல் கிராமப்புறங்களில் இழிவுபடுத்தப்பட்டுள்ளோம்,” என்று அன்வார் கூறினார்.
-FMT