முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த 2013 இல் சுமார் 208 கோடி ரிங்கிட் மலேசிய பணத்தை தனது வங்கி கணக்கில் பெற்றதாக ஒரு வங்கியின் நிர்வாகி இன்று நீதிமன்றத்தில் கூறினார்.
தற்போது நடைபெறும் 1எம்டிபி வழக்கு விசாரணையின் போது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்த எம்இஸ்லாமிக் வங்கி நிர்வாகி உமாதேவி, நஜீப் அவர்களின் வங்கிக் கணக்கு எண்கள் 694 என்று முடிவடையும் கணக்கில், இந்த பணம் வந்ததாக கூறினார்.
மார்ச் 10ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 10-ஆம் தேதி 2013இல் அவரின் வங்கியின் இந்த 208 கோடி பணம் வரவு செய்யப்பட்டிருந்தது என்று கூறினார்.
அந்தப் பணத்தில் இருந்து 200 கோடியை அவர்கள் தனோர் சிங்கப்பூர் என்ற நிறுவனத்திற்கு மாற்றியிருந்தார்.
இந்த பண பட்டுவாடா வில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று நஜிப் மறுத்துள்ளார். இருப்பினும் இந்த பணம் அவருடைய வங்கிக் கணக்கின் வழி பட்டுவாடா செய்யப் பட்டிருப்பதால் அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அரசு தரப்பு கூறிவருகிறது.
இருப்பினும் இதை மறுக்கும் நஜிப் இந்த பணப்பட்டுவாடா முழுவதும் ஜோ லோ என்பவரால் நடத்தப்பட்டதால் அதில்தான் சம்பந்தப்படவில்லை என்று மறுத்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த ஊழல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை 12 வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார் நஜிப்.