பிரதமர் தேதிக்கு பின்னரே, எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்- மகாதீர்

நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர், மன்னர் சம்மதத்தை கோரிய பின்னரே பொதுத் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை ஜெராக்கன் தனா ஏர் தெரிவிக்கும் என்று ஜிடிஏ தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்துள்ளார்.

வெள்ள காலத்தில் தேசிய தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் கூட்டணி உறுதியாக உள்ளது.

“அவர்கள் மன்னரிடம் விண்ணப்பம் செய்தால், தேர்தலை நடத்துவதை  எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்”.

“பெரிய வெள்ளத்தை எதிர்கொள்ளாதபோதும், பலத்த காற்றை எதிர்கொள்ளாதபோதும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், இதனால் வாக்களிக்கும் அனைவரும் பாதுகாப்பாகவும் சரியாகவும் வாக்களிக்க முடியும்” என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எல்லாம் பாதுகாப்பாக இருப்பதற்கு பருவமழைக்குப் பிறகு தேர்தல் நடத்துவதே சரியான நேரம் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலை நடத்தும் வகையில், நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்ற அம்னோ உச்ச கவுன்சில் நேற்றிரவு எடுத்த முடிவிற்கு பதிலளிக்கும் வகையில் மகாதீரின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

அம்னோ துணைத் தலைவரான பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு, நாடாளுமன்றத்தை கலைக்க யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கு எப்போது ஆலோசனை வழங்குவது என்பது குறித்து அவரவர் விருப்புரிமை உள்ளதாக அக்கட்சி கூறியது.

அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சைபர்ஜெயாவில் நடைபெற்ற ஜிடிஏ நிகழ்வில் பேசிய மகாதீர், அம்னோ கட்சிக்கு சாதகமான நேரம் என்பதால் இம்மாத இறுதியில் அல்லது நவம்பரில் தேர்தலை நடத்த விரும்கிறார்கள் என்று கூறினார்.

ஆண்டுதோறும் வெள்ளக் காலத்தில் நடத்தப்படும் தேர்தல் அம்னோவுக்கு மட்டுமே பயனளிக்கும், ஏனெனில் ஜிடிஏ உட்பட மற்ற கட்சிகளை ஆதரிக்கும் பலர் வாக்களிக்க முடியாது.

“அவர்கள் லஞ்சம் கொடுத்தவர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார். “இந்த வெள்ளம் பல மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் என்பதை அவர்கள் கவலைப்படுவதில்லை.”

ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்படாவிட்டால் தேர்தலில் போட்டியிடும் ஜிடிஏவின் திட்டங்கள் குறித்தும் மகாதீரிடம் கேட்கப்பட்டது. ஜிடிஏவில் “பிளான் B” உள்ளது, அதை தற்பொழுது வெளிப்பதும் திட்டம் இல்லை என்றார் அவர்.

“பதிவு செய்யக் கோரிய 30 கட்சிகள் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை இந்த மாதம் சங்கங்களின் பதிவாளர் எங்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்கள். அனைத்து விதிகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்பட்டதால் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

GTA என்பது மலாய் சார்ந்த கட்சிகள், NGOக்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாகும்.

ஜிடிஏவில் மகாதீரின் பெஜுவாங், பெர்ஜாசா, பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா மலேசியா புத்ரா மற்றும் தேசிய இந்திய முஸ்லிம் கூட்டணி கட்சி இமான் ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

-FMT